அண்ணா பல்கலை.யில் குறுகிய கால கணினி பயிற்சி

By செய்திப்பிரிவு

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள ராமானுஜன் கணினி மையத்தில் குறுகிய கால கணினி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

“சி புரோகிராமிங்” தொடர்பான இந்த ஒரு வார கால பயிற்சியில், 10, 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் சேரலாம். வகுப்புகள் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். பயிற்சி கட்டணம் ரூ.500 மட்டும். இக்கட்டணத்தை “Co-ordinator, C Programming” என்ற பெயரில் எடுக்கப்பட்ட, சென்னையில் மாற்றத்தக்க டிமாண்ட் டிராப்டாகச் செலுத்த வேண்டும். பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் டி.டி.யுடன் அண்ணா பல்கலைக்கழக ராமானுஜன் கணினி மையத்துக்கு (கேண்டீன் அருகே உள்ளது) நேரில் வந்து பெயரை பதிவுசெய்துகொள்ளலாம். ஏப்ரல் 15-22, 23-30, மே 2-8, 9-15, 17-23, 24-30, மே 31-ஜூன் 6 என அணி அணியாக (பேட்ஜ்) பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான அணியி லும் சேர்ந்துகொள்ளலாம். கணினி பயிற்சியை முடிக்கும் மாணவர் களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலை. ராமானுஜன் கணினி மைய இயக்குநர் பேராசிரியர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்