தமிழகத்தில் கழிவறை இல்லாத பள்ளிகள் அதிகம்: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

கழிவறை இல்லாத பள்ளிகள் தமிழகத்தில் அதிகமாக உள்ளன என தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டுவில் பா.ஜ.க-வின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கூடங்குளத்தில் அணு உலைகள் பாதுகாப்பாக உள்ளன. மக்களுக்கு பாதுகாப்பாற்ற நிலையை ஒருபோதும் பா.ஜ.க., ஏற்படுத்தாது. தமிழகத்தில் ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும் செயலற்று உள்ளன. தமிழக பள்ளிகள் மோசமாக இருக்கின்றன. குறிப்பாக, கழிவறை இல்லாத பள்ளிகள் தமிழகத்தில் அதிகமாக உள்ளன. இதுகுறித்து, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி தமிழக வருகையின்போது, கருப்புக் கொடி காட்டப் போவதாக வைகோ தெரிவித்துள்ளது குறித்து, தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அவர், “பிரதமர் நரேந்திர மோடி குறித்த வைகோவின் குற்றச்சாட்டில் உள்நோக்கம் இருக் கிறது. மதிமுகவினர் கருப்புக் கொடி காட்டுகிறார்கள் என்றால், பா.ஜ.க-வினர் நரேந்திர மோடிக்கு அரணாக இருப்பார்கள்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்