பஸ் தொழிலாளர் வேலைநிறுத்த விவகாரம்: தமிழக அரசுக்கு அரசியல் கட்சிகள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழக அரசுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தலைவர்கள் விடுத்த அறிக்கைகள் வருமாறு:

கருணாநிதி (திமுக தலைவர்)

போக்குவரத்து ஊழியர் பிரச் சினைகள் கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டிலேயே முடிவடைந்துவிட்ட நிலையில், அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த யாரும் முன்வரவில்லை.

பேச்சுவார்த்தை நடத்த தவறிய போக்குவரத்து துறை அமைச்சரும், முதலமைச்சரும், தற்போதாவது பிரச்சினையில் தலையிட்டு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வை காண வேண்டும்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்)

பழைய ஊதிய ஒப்பந்தம் நிறைவடைந்து 15 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தம் கொண்டுவர வேண்டும் என்று போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் தொழிலாளர் நலத்துறை சிறப்பு ஆணையர் 11 தொழிற்சங்கங்களுடன் கடந்த 26-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்திய போது, ஊதிய உயர்வு குறித்து எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை. வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டி ருந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் இம் மாத சம்பளம் வெட்டப்பட்டுள்ளதே முன்கூட்டிய வேலை நிறுத் தத்துக்கு காரணம். எனவே, தமிழக அரசு அனைத்து தொழிற் சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்)

புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர் பான பேச்சுவார்த்தைகள் பலனளிக் காத நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானதாகும். தைப்பொங் கல் நெருங்கி வரும் வேளையில் தொழிலாளர்களின் போராட்டத் தால் மக்களுக்கு மிகப்பெரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, தமிழக அரசு அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்)

தமிழகத்தில் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் 13 ஆண்டு களுக்குப் பிறகு வேலைநிறுத் தத்தை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 2 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பயன் இல்லை. கோரிக்கைகளை ஏற்பது தொடர்பாக அரசுத் தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகாததால், இன்றே (நேற்று) வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை ஆட்சியாளர்கள் உணராமல் உள்ளனர்.

கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்)

போக்குவரத்துத் துறை ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தைகள் தோல்வியுற்றுள்ள நிலையில் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது. தமிழக அரசு உரிய தீர்வை வழங்காததால் திராவிடர் கழகத்தின் தொழி லாளர் அணியைச் சேர்ந்த பணியாளர்களும் இதில் பங்கேற்பார்கள்.

பண்ருட்டி வேல்முருகன் (தமிழர் வாழ்வுரிமைக் கட்சி)

போக்குவரத்து தொழிலாளர் கள் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது பொதுமக்களை பெரும் துன்பத்துக்கு ஆளாக்கி யுள்ளது. எனவே, இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்க்க முதலமைச்சரும், போக்குவரத்துத் துறை அமைச்சரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி)

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து அவர்களை உருட்டி மிரட்டி பணியவைக்கும் வேலைகளில் ஈடுபடுவது போல் தெரிகிறது அரசின் இத்தகைய போக்கை விடுதலை சிறுத்தைகள் வன்மை யாக கண்டிக்கிறது.

தமிமுன் அன்சாரி (மனிதநேய மக்கள் கட்சி)

போக்குவரத்து தொழிலாளர் களின் நியாயமான கோரிக்கை களை பரிசீலித்து தமிழக அரசு அவர்களை மீண்டும் பேச்சுவார்த் தைக்கு அழைக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்