தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப் பட்டினத்தில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து திரவ இயக்க அமைப்பு மைய ஊழியர் கூட்ட மைப்பு தயாரித்த திட்ட அறிக் கையை கனிமொழி எம்.பி. திங்கள் கிழமை வெளியிட்டார்.
3-வது ஏவுதளம்
இந்திய விண்வெளித்துறை இன்றைய கால நிலையில் பெருகி வரும் தொலையுணர்வு மற்றும் தொலைத்தொடர்பு செயற்கை கோள்களின் தேவையைக் கருத் தில் கொண்டு அவற்றை ஏவுவதற் கான புதிய ஏவுமையம் அமைக்க 12-ம் ஐந்தாண்டு திட்டத்தில் திட்டம் தீட்டியுள்ளது.
இந்த திட்டத்துக்கான இடம் தேர்வு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட் டுள்ளது. அந்த குழு தனது இறுதி அறிக்கையை தயாரித்து வருகிறது.
ஏற்கெனவே முதல் இரண்டு ஏவுதளங்கள் ஹரிகோட்டாவில் அமைந்துள்ளதால், மூன்றாவது ஏவுதளத்தை தூத்துக்குடி மாவட் டம் குலசேகரப்பட்டினம் கடற்கரை யில் அமைக்க பரிசீலனை செய்யப் பட்டது.
விஞ்ஞானிகள் எதிர்ப்பு
ஆனால், மூன்றாவது ஏவுதளத்தை யும் ஹரிகோட்டாவிலேயே அமைப்பது என குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளி யாயின. இதற்கு விஞ்ஞானிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது. மேலும், தமிழக அரசியல் தலைவர்களும் குறிப்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் இது தொடர்பாக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் 3-வது ஏவு தளத்தை குலசேகரப்பட்டினத்தில் அமைத்தால் ஏற்படும் நன்மைகள், இங்கு அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாக திரவ இயக்க அமைப்பு மைய ஊழியர் கூட்டமைப்பு சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
கனிமொழி வெளியிட்டார்
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்துக்கு வந்த கனிமொழி எம்.பி. இந்த திட்ட அறிக் கையை திங்கள்கிழமை வெளியிட் டார். அந்த அறிக்கையில் 3-வது ஏவு தளத்தை குலசேகரப்பட்டினத்தில் அமைத்தால் ஏற்படும் நன்மைகள் தொழில்நுட்ப ரீதியாகவும், வசதி கள் அடிப்படையிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இயற்கை சீற்றங்கள், விபத்து கள், போர்கள் மற்றும் பேரழிவு களினால் ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் இந்தியா விண் வெளி ஆராய்ச்சியில் சுமார் பத்து ஆண்டுகள் பின்னோக்கி செல்லக் கூடும். எனவே, ஒரு ஏவுதளம் வேறொரு இடத்தில் அமைய வேண்டியது அவசியம்.
நிலநடுக்கோட்டுக்கு அருகே
இதை கருத்தில் கொண்டே விண் வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடு கள் பல்வேறு இடங்களில் தங்கள் ஏவுதளங்களை அமைத்துள்ளன.
பொதுவாக ராக்கெட் ஏவுவதற்கு ஏற்ற இடம் நிலநடுக்கோடு பகுதி யேயாகும். இங்கிருந்து ராக்கெட்டு களை ஏவுவதால் ஒரு ராக்கெட்டின் முழு ஆற்றலையும் பயன்படுத்தி செயற்கை கோள்களை ஏவ முடியும். இதனால் அதிக எடை யுள்ள செயற்கை கோள்களை விண்ணுக்கு செலுத்த இயலும். நிலநடுக்கோட்டிலிருந்து துருவங் களை நோக்கி செல்ல செல்ல ராக்கெட்டின் ஏவுதிறன் குறைந்து கொண்டே போகும். பூமியின் விட்டம் நிலநடுக்கோட்டு பகுதியில் அதிகமாகவும், துருவம் நோக்கிச் செல்லச் செல்ல குறைந்து கொண்டே வரும்.
இதனால் புவியின் ஈர்ப்பு சுற்று விசை நிலநடுக்கோட்டில் அதிகமாகவும், துருவம் நோக்கி செல்ல செல்ல குறைந்து கொண்டே வரும். நிலநடுக்கோட்டில் இருந்து ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதன் மூலம் பூமியின் ஈர்ப்பு சுற்று விசையை முழுமை யாக பயன்படுத்தி குறைவான எரி பொருள் செலவில் ராக்கெட்டுகளை ஏவமுடியும். குலசேகரப்பட்டினம் நிலநடுக்கோட்டுக்கு மிக அருகா மையில் அமைந்துள்ளது.
ஜி.எஸ்.எல்.வி., பி.எஸ்.எல்.வி.
மேலும், ஜி.எஸ்.எல்.வி., மற்றும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளின் பெரும்பாலான இயந்திரங்கள் மகேந்திரகிரியில் தான் தயாரிக் கப்படுகின்றன. குலசேகரப்பட்டி னத்தில் ஏவுதளம் அமைக்கும் போது அவைகளை கொண்டு வரு வது எளிது.
மேலும், இங்கிருந்து ஜி.எஸ்.எல்.வி., பி.எஸ்.எல்.வி. என இரண்டு வகையான ராக்கெட்டு களையும் எளிதாக ஏவ முடியும். என பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
குலசேகரப்பட்டினத்தில் இருந்து நிலவுக்கு செல்வது எளிது!
இந்திய விண்வெளி மையத்தின் மூன்றாவது ராக்கெட் ஏவுதளத்தை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருபவர் மூத்த விஞ்ஞானி என். சிவசுப்பிரமணியன். திரவ இயக்க அமைப்பு மையத்தில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் கூறும்போது, தற்போது ஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து 2000 கிலோ எடையுள்ள செயற்கைகோள்கள்தான் தற்போது ஏவப்படுகின்றன. குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்கப்பட்டால் 3000 கிலோ எடையுள்ள செயற்கைகோள்கள் வரை ஏவ முடியும். நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் இந்திய அரசிடம் உள்ளது. இந்த திட்டத்திற்கு ஏற்ற இடம் குலசேகரப்பட்டினம்தான். இங்கு அமைக்கப்படும் ஏவுதளம் மூலம் நிலவுக்கு மனிதனை அனுப்பும் விண்கலத்தை எளிதாகவும், வெற்றிகரமாகவும் ஏவ முடியும். மேலும், அருகேயுள்ள நாங்குநேரியில் ராக்கெட் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை உருவாக்கலாம். நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் நிலவுக்கு செல்லும் நபர்களுக்கு பெங்களூரில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும்போது, மகேந்திரகிரியில் உள்ள சுமார் 7,000 ஹெக்டேர் நிலத்தில் இந்த பயிற்சி மையத்தை அமைக்க முடியும். மொத்தத்தில் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் முலம் தென் தமிழகம் நல்ல வளர்ச்சி அடையும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
50 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago