தொகுப்பூதிய கணினி பயிற்றுநர் நியமனம் ரத்து

By செய்திப்பிரிவு

நடப்பு கல்வி ஆண்டில் (2014-2015) அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் 652 கணினி பயிற்றுநர்களை நியமிக்க அரசு முடிவு செய்தது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கணினி பயிற்றுநர்களை தேர்வுசெய்ய சற்று காலம் ஆகும் என்பதால் அதுவரையில் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருப்பதற்காக இந்த தற்காலிக ஏற்பாடு செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதுதொடர்பாக டிசம்பர் 5-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், 652 கணினி பயிற்றுநர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கும் பணியை விரைந்து மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் தொகுப்பூதிய நியமனம் தொடர்பான அரசாணை ரத்து செய்யப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா இதை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கடந்த 15-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்