ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீடு அரசுக்கு தானம்: முதியோர் தின விழாவில் மூதாட்டியின் தாராளம்

By செய்திப்பிரிவு

ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீட்டை அரசுக்கு இலவசமாக வழங்கி, அதற்கான தானப் பத்திரத்தை முதியோர் தின விழாவில் ஆட்சியரிடம் மூதாட்டி வழங்கினார்.

சர்வதேச முதியோர் தினவிழா ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் வேலூர் மாவட்டம், ஆற்காடு தாலுகா திமிரியைச் சேர்ந்த மூதாட்டி தாட்சாயினி (82) என்பவர் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின்போது அவர், ‘‘2 ஆயிரத்து 854 சதுர அடி பரப்பளவுள்ள ரூ.50 லட்சம் மதிப்பிலான தனது வீட்டை அரசுக் குத் தானமாக வழங்குவதாக வும், அதை குழந்தைகள் கல்விக் காகவும், ஆதரவற்றோரின் நல் வாழ்வுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்றார். அந்த வீட்டின் பத்திரங்களை சமூக நலத்துறை பெயருக்கு மாற்றம் செய்து அதற்கான ஆவணங்களை ஆட்சியர் ஆர்.நந்தகோபாலிடம் வழங்கினார். இதுகுறித்து தாட்சாயினி மேலும் கூறும்போது, ‘‘எனக்கு 14 வயதில் திருமணம் நடந்தது. என் கணவர் பாலு, திருமணமான ஓராண்டில் உயிரிழந்தார். அதன் பின்பு மறுமணம் செய்ய என் குடும் பத்தார் வலியுறுத்தினர். ஆனால், அதை நான் ஏற்கவில்லை. மாறாக என் உறவினர் வழியில் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தேன்.

இந்நிலையில், சமூகநலத் துறையில் மகளிர் ஊர் நல அலுவல ராக பணியாற்றி வந்தேன். அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் பணம் சேர்த்து, திமிரி அருகே பெரிய வீடு ஒன்றை கட்டினேன். இதற்கிடையே, பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு, என் உறவினரால் நான் புறக்கணிக்கப்பட்டேன். பெயரளவுக்கு என்னிடம் பழகியவர்கள், என் சொத்தின் மீது குறியாக இருந்தனர். நான் வளர்த்த வளர்ப்பு மகனும் எனக்கு ஆதரவாக இல்லை.

ஆதரவற்ற நிலையில் உள்ள நான், எனது சொத்தை இயலாத வர்களுக்கு கொடுத்து உதவ எண் ணினேன். அதற்காக பலமுறை யோசித்துதான் இந்த முடிவை எடுத்தேன். எனவே எனக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப் புள்ள என் வீட்டை மாவட்ட சமூக நலத் துறைக்கு தானமாக எழுதிக் கொடுக்க முடிவு செய்து, அதன்படி சர்வதேச முதியோர் தின விழாவில் அரசுக்கு வழங்கியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது’’ என்றார். தாட்சாயினியிடம் சொத்து பத்திரங்களை பெற்ற ஆட்சியர் ஆர். நந்தகோபால், அவரைப் பாராட்டினார். மேலும் தாட்சியாயினி வீட்டில் சமூகநலத் துறையின் கீழ் இயங்கி வரும் தையல் பயிற்சி மையம் செயல்படும் என அறிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE