பயணியை இழுத்துக்கொண்டு ரயிலில் பாய்ந்த மனநிலை பாதித்தவர் - இருவரும் பலத்த காயம்: அரக்கோணத்தில் பரபரப்பு

By செய்திப்பிரிவு

அரக்கோணம் ரயில் நிலையத்தில் காத்திருந்த தனியார் பள்ளிப் பேருந்து ஓட்டுநரை மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் பிடித்து இழுத்துக்கொண்டு ரயில் முன் பாய்ந்தார். இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் கள் மற்றும் மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவாவுக்கு சுற்றுலா சென்றனர். சுற்றுலா முடிந்து அனைவரும் ஹூப்ளி எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். இந்த ரயில், திருவள்ளூரில் நிற்காது என்பதால், அரக்கோணத்தில் இறங்கி, அங்கிருந்து பள்ளி வாகனம் மூலம் திருவள்ளூர் செல்ல முடிவு செய்தனர்.

அவர்களை அழைத்துச் செல்ல, தனியார் பள்ளிப் பேருந்து ஓட்டுநரான திள்வள்ளூர் வட்டம், திருப்பாச்சூரைச் சேர்ந்த பிரேம்குமார் (25) மற்றும் உதவி யாளர் ரமேஷ் ஆகியோர் நேற்று காலை அரக்கோணம் ரயில் நிலையத்தில், 2-வது நடைமேடையில் காத்தி ருந்தனர். அப்போது அங்கு சற்று தொலைவில் அமர்ந்தி ருந்த மனநிலை பாதித்த ஒருவர் பிரேம்குமார் அருகில் வந்துள்ளார். அவரை மகேஷ் குமார் விரட்டியதாகக் கூறப் படுகிறது. இந்நிலையில், அந்த நேரத்தில் ஹூப்ளி எக்ஸ் பிரஸ் ரயில் 2-வது நடை மேடைக்குள் மிதமான வேகத் தில் வந்து கொண்டிருந்தது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர் களை வரவேற்க பிரேம்குமார் தயாராக இருந்தபோது, திடீரென வேகமாக ஓடிவந்த மனநிலை பாதிக்கப் பட்டவர், பிரேம்குமாரை பிடித்து இழுத்துக்கொண்டு ரயில் முன் பாய்ந்தார்.

இதில் பிரேம்குமாரின் வலது கால், இடுப்புப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. மனநிலை பாதிக்கப்பட்டவரின் வலது கால் எலும்பு முறிந்து துண்டானது. இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்களை மீட்டு அரக்கோணம் மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்