ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் இரும்புத் தடியால் தாக்கியுள்ளனர். இதில் 4 மீனவர்கள் காயமடைந்தனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறை முகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் சென்றனர். இவர்கள் பாக். ஜலசந்தி கடல் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தங்கள் படகுகள் மூலம் மீனவர்களின் விசைப்படகுகள் மீது மோதினர். இதனால் புவனேந்திரன் என்பவரது விசைப்படகு சேதமடைந்தது.
மேலும் வலைகளை அறுத்து கடலில் வீசினர். கற்கள், சோடா பாட்டில், இரும்புத் தடி கொண்டு மீனவர்களைத் தாக்கினர்.
இலங்கை கடற்படையி னரின் தாக்குதலில் காயமடைந்து கரை திரும்பிய சங்கர், ராஜீ, முனியசாமி, ஆயன்தாஸ் ஆகிய 4 மீனவர்கள் ராமேஸ்வரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டனர். இத்தகவலை ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் பிரதிநிதி எம்ரிட் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து நாட்களில் இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடத்தும் இரண்டாவது தாக்குதல் இது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago