தமிழக மக்களுக்கு முதல்வரா? இல்லையா? என்பதை ஓ.பன்னீர் செல்வம் விளக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறைந்தபட்சம் ஒருவார காலம் நடத்துவதுதான் மரபாக இருந்தது. ஆனால் தற்போது கூட்டத்தொடர் 3 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. அதில் பேசிய தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், ஆளும் கட்சி சட்டப் பேரவை உறுப்பினர்கள் அனைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளராக இருக்கும் ஜெயலலிதாவை மக்கள் முதல்வர் என்றும், அவரது வழிகாட்டுதலின் படிதான் ஆட்சி நடைபெறுகிறது என்றும் பேசியுள்ளார்கள். அவர் மக்கள் முதல்வர் என்றால், பன்னீர் செல்வம் யாருக்கு முதல்வர்? தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வரா, இல்லையா? என்பதை அவர் விளக்கிட வேண்டும்.
தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும், ஏழை, எளிய மக்களுக்காக மட்டுமே ஆட்சி செய்த காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், ஆகியோர் மட்டுமே ‘மக்கள் முதல்வர்’ என்று சொல்லப்படவேண்டியவர்கள்.
ஜெயலலிதாவின் படத்தை அனைத்து அரசு அலுவலகங்களில் இருந்தும், அரசினுடைய விளம்பரங் களில் இருந்தும் அகற்றப்பட வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அவ்வழக்கில் ஆஜரான அதிமுக அரசின் அட்வகேட் ஜெனரல் சோமயாஜுலு, முன்னாள் முதலமைச்சர் படத்தை வைப்பதற்கு அரசு ஆணை வெளியி டப்பட்டுள்ளது என்று வாதம் செய்துள்ளார். இதன் அடிப்படை யில் அதிமுக அரசு முடிவெடுத்து ஜெயலலிதா படத்தை வைக்குமே யானால், தமிழகத்தின் முதலமைச் சர்களாக பணியாற்றிய காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகியோரின் படங்களை கட்டாயம் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago