அந்தமான் அருகே 7 தொழிலாளர்களுடன் தோணி மாயம்: கப்பல், விமானம் மூலம் தேடும் பணி தீவிரம்

அந்தமான் அருகே 7 தொழி லாளர்களுடன் மாயமான தோணி யைத் தேடும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்த மான `வேளாங்கண்ணி மாதா’ என்ற பெயருடைய தோணி, கடந்த 12-ம் தேதி காலை போர்ட் பிளேயரில் இருந்து கட்டுமானப் பொருட்கள் மற்றும் அரிசி ஏற்றிக் கொண்டு கார் நிக்கோபர் தீவு நோக்கி புறப்பட்டது.

தோணியின் மாஸ்டராக தூத்துக் குடி தட்டார் தெருவைச் சேர்ந்த கெய்த்தான் மோரீஸ் (35) பணிபுரிந்தார். என்ஜின் டிரைவராக ராமநாதபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் (30) இருந்தார்.

மேலும் பிஹார், ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அஜய்பையா(19), மனோஜ் கிண்டே(39), சுரேஷ் ராம்(26), அலெக்சியஸ் கங் காரி(44), தருமுண்டா(37) ஆகியோ ரும் இருந்தனர். தோணியை ஹட்பே என்ற பகுதியில் 13-ம் தேதி நிறுத்தியுள்ளனர். அங்கிருந்து 15-ம் தேதி மீண்டும் தீவை நோக்கி புறப்பட்டனர். இந்த தோணி 18-ம் தேதி மாலை 6 மணிக்கு கார்நிக்கோபர் தீவை சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், குறித்த நேரத்தில் சென்று சேரவில்லை.

அந்தமான் நிக்கோபர் தீவில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர் கப்பல் மற்றும் விமானம் மூலம் தோணியை தேடி வருகின்றனர். ஆனால், ஒரு வாரமாகியும் தோணியைப் பற்றி எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில் தோணி மாஸ்டர் கெய்த்தான் மோரீஸ் உறவினர்கள் கடந்த 24-ம் தேதி தூத்துக்குடி ஆட்சியர் ம.ரவிக்குமாரை சந்தித்து மனு அளித்தனர். தோணியை தேடும் பணியை துரிதப்படுத்து மாறு இந்திய கடலோர காவல்படை, கடற்படை மற்றும் மீன்வளத் துறைக்கு ஆட்சியர் அவசரத் தகவல் அனுப்பியுள்ளார். தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE