ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவினருடன், தேர்தல் செலவுக் கணக்கு பார்வையாளர்கள் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினர்.
வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய 3 தொகுதிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் செலவுக் கணக்கு பார்வையாளர்களாக பி.ராஜாராம், தல்லா வெங்கடரவி, பி.சி.எஸ்.நாயக், இராமகிருஷ்ணா பண்டி, ராஜீவ் பென்ஸ்வால், கே.பாலகிருஷ்ணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தால் அமைக்கப்பட்ட ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினர்.
இதில், பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வரும் கட்டணச் செய்திகள் மற்றும் விளம்பரங்களை கண்காணிப்பது, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளை பராமரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான விக்ரம் கபூர், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் டி.ஜி.வினய், இரா.லலிதா, ஆர்.ஆனந்தகுமார் உள்ளிட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago