தூத்துக்குடி தனியார் மின் நிலையத்தில் முதல் அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது

தமிழக அரசின் சார்பில் அனுமதி வழங்கப்பட்ட தனியார் மின் நிறுவனங் களில், கோஸ்டல் எனர்ஜென் மின் நிலைய முதல் அலகில், வணிக ரீதியாக 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இந்த மின் நிலையத்தில் இருந்து யூனிட் ரூ.4.91 என்ற விலையில் மின்சாரத்தை தமிழக மின் வாரியம் கொள்முதல் செய்கிறது.

மின் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், கடந்த 1997-க்கு பிறகு நாடு முழுவதும் தனியார் மின் நிறுவனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதன்படி, சுற்றுச்சூழல் மற்றும் துறை ரீதியான ஒப்புதல்களை எளிதாக வழங்கி, 30-க்கும் மேற்பட்ட தனியார் மின் நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

தமிழகத்திலும் மின் வாரியம் சார்பில் பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. வீடியோகான், செட்டிநாடு சிமென்ட்ஸ், இந்தியா சிமென்ட்ஸ், தென்னிந்திய நூற்பாலைகள் அசோசியேஷன், ஐ.எல். அண்ட் எப்.எஸ்., கடலூர் பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் என 10-க்கும் மேற்பட்ட தனியார் மின் நிலையங்களுக்கு படிப்படியாக அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் நிதி நெருக்கடி, சுற்றுச் சூழல் பிரச்சினை, பொதுமக்கள் எதிர்ப்பு போன்ற காரணங்களால், பல மின் நிறுவனங்கள் உரிய காலத்தில் கட்டுமானப் பணியை தொடங்காமலும், தொடங்கிய பணிகளை முடிக்க முடியாமலும் உள்ளன. கடலூர் பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் மற்றும் தூத்துக்குடி கோஸ்டல் எனர்ஜென் நிறுவனங்கள் மட்டும் மின் நிலைய கட்டுமானத்தை விரைவுபடுத்தின.

இந்நிலையில், 1,200 மெகாவாட் திறன்கொண்ட கோஸ்டல் எனர்ஜென் நிறுவன மின் நிலையத்தின் முதல் அலகில், வணிகரீதியாக 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோஸ்டல் எனர்ஜென் நிறுவனத் தலைவர் அஹமத் ஏ.ஆர்.புஹாரி, சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

பல்வேறு தடைகளைத் தாண்டி, கோஸ்டல் எனர்ஜென் நிறுவனத் தின் தூத்துக்குடி முத்தியரா மின் நிலையத்தில் வணிக ரீதியான மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. ரூ.7,600 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த மின் நிலையத்தின் முதல் அலகில் 600 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு, முழுவதும் தமிழக மின் வாரியத்துக்கு யூனிட் ரூ.4.91 என்ற விலையில் விநியோகம் தொடங்கியுள்ளது. இரண்டாம் அலகில் அடுத்த ஆண்டில் மின் உற்பத்தி தொடங்கும்.

அடுத்தகட்டமாக இரண்டாம் நிலை யில் 1,600 மெகாவாட், மூன்றாம் நிலையில் 2,000 மெகாவாட் மின்சா ரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ண யித்துள்ளோம். இனி வரும் காலங் களில் தமிழக மின் வாரியத்துக்கு முன்னுரிமை அடிப்படையிலும், அண்டை மாநிலங்களுக்கு வணிக அடிப்படையிலும் மின்சாரம் விநியோகம் செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE