‘தி இந்து’ செய்தி எதிரொலி: அரசு நிலம் ஆக்கிரமிப்பு புகாரை விசாரிக்க தனிக்குழு நியமனம்; 60 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு தொடர்பாக அளிக்கப்படும் புகார் மனுக்களின் மீது குறிப்பிட்ட கால வரம்புக்குள் நடவடிக்கை எடுக்கும் வகையில் முதல்முறையாக வட்ட அளவிலான குழு அமைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கட்டுமான தொழிலாளர்களுக் கான அரசு குடியிருப்பு கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட நிலத்தை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன் கடந்த 11-ம் தேதி பார்வையிட்டார். அப்போது, ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்ட நிலங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், வேறு நிலங்களை தேர்வு செய்யும் பணி நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் செய்தி ‘தி இந்து’ வில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட் டத்தில் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து அளிக்கப்படும் புகார் மனுக்களை விசாரித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள, தாலுகா அளவிலான குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழு, அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றுதல் தொடர்பாக அளிக்கப்படும் மனுக்களின் மீது, முதல்கட்டமாக வட்ட அளவில் வட்டாட்சியர்கள் மூலம் விசாரணை செய்து, சம்பந்தப்பட்ட நிலம் அளவிடப்படும். பின்னர், தணிக்கை செய்து ஆக்கிரமிப்பு கள் உறுதி செய்யப்பட்டால், ஆக்கிரமிப்பு சட்ட பிரிவு 7-ன் கீழ் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கும். புகார் மனு அளிக்கப்பட்ட நாள்முதல் 60 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதன் மூலம், அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக அளிக்கப்படும் புகார் மனுக்கள் மீது உடனடியாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள வழி பிறந்துள்ளது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: அரசு நில ஆக்கிரமிப்புகள் தொடர்பான மனுக்களை விசாரிக்க, ஏற்கெனவே வெளி யிடப்பட்டுள்ள அரசாணையின் வழிகாட்டுதலின் பேரிலேயே, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதன் மூலம், ஆக்கிரமிப்பு செய்துள்ள நபரின் கருத்தை கேட்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால அவகாசத் துக்குள் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள குழுக்களின் உறுப்பினர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்