தொழிலாளர்களாக எங்களை அங்கீகரிக்க வேண்டும்: மீனவப் பெண் தொழிலாளர்கள் கோரிக்கை

மீனவப் பெண்களை தொழிலாளர் களாக அரசு அங்கீகரிக்க வேண் டும் என்று மீனவப் பெண் தொழி லாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, மீனவப் பெண் தொழிலாளர் சங்கங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் சு.சாமுண்டீஸ்வரி, மாநில தலைவர் புனிதா நேற்று சென்னையில் கூட்டாக அளித்த பேட்டி:

மீன் பிடிப்பு சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களை ஒருங் கிணைத்து மீனவப் பெண் தொழி லாளர் சங்கம் ஏற்படுத்தப்பட்டுள் ளது. 5 மாவட்டங்களைச் சேர்ந்த 5,632 பேர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கத்தின் மாநாடு இன்று (நேற்று) பட்டினப்பாக்கத்தில் நடைபெற்றது.

இதில், பல்வேறு கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன. இதன் படி, மீனவர் நலனுக்காக மீன்வளத் துறையினரால் அறிவிக்கப்படும் நலத்திட்டங்களின் மீனவப் பெண்களுக்கும் பங்கு இருக்க வேண்டும். மீன்பிடித் தொழில் சார்ந்த பணிகளில் உள்ள மீனவப் பெண்களை தொழிலாளர்களாக அங்கீகரிக்க வேண்டும். மீனவப் பெண் தொழிலாளர்களுக்கு தனி அமைச்சகம் வேண்டும்.

60 வயதுக்கு மேற்பட்ட பெண் மீன் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டும். மீனவர் குழந்தைகளுக்கு மீன் மற்றும் கடல் சார்ந்த கல்வியில் மானியம், இட ஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும். மீன் சந்தைகள் உள்ள பகுதிகளில் மீனவ பெண்களுக்கு கழிப்பறைகள், ஓய்வறைகள் கொண்ட தங்கும் வசதிகளை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

மீனவர் நலவாரியத்துக்கு ரூ.5 கோடியை ஒருமுறை மட்டுமே தந்துவிட்டு அரசு மவுனம் சாதிக் கிறது. இதனால், மீனவ பெண் தொழிலாளர்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE