அரசுப் பேருந்துகளில் 58 வயதானவர்களுக்கு பயணச் சலுகை வேண்டும்: மூத்த குடிமக்கள், பென்சனர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழகத்தில் 58 வயதான மூத்த குடிமக்கள் நகரப் பேருந்துகளில் கட்டணமின்றியும், புறநகர்ப் பேருந்துகளில் 50 சதவீத கட்டண சலுகையிலும் பயணம் செய்வதற்கான ஆணையை அரசு பிறப்பிக்க வேண்டும் என்று அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் அ.சாமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 70 லட்சம் மூத்த குடிமக்களும், 7 லட்சம் பென்சனர்கள் மற்றும் குடும்ப பென்சனர்கள் உள்ளனர். இவர்களின் நலனை காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசுக்கு கோரிக்கை

மத்திய அரசின் 7-வது ஊதியக் குழுவின்படி மாதந்தோறும் மருத்துவப்படி ரூ.2,500 வழங்க வேண்டும். ஓய்வுபெறும் அரசு ஊழியர் கடைசி மாதத்தில் பெற்ற சம்பளத்தில் 65 சதவீதத்தை பென்சனாகவும், குடும்ப பென்சனை 45 சதவீதமாகவும் உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும். 60 வயதுக்கு கீழ் உள்ள பென்சன்தாரர்களுக்கு ரூ.5 லட்சமும், 60 வயதுக்கு மேல் ரூ.7 லட்சமும், 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.10 லட்சம் வரையும் வருமான வரி விலக்கு நிர்ணயிக்க வேண்டும். மாத மருத்துவப்படியை வருமானமாக கருதக்கூடாது. பணியில் இருக்கும்போது மறைந்த அரசு ஊழியர் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 80 சதவீதத்தை குடும்ப பென்சனாக 10 ஆண்டுகளுக்கு அமல்படுத்த வேண்டும்.

தமிழக அரசுக்கு கோரிக்கை

20 ஆண்டுகள் பணியாற்றினாலே மத்திய அரசு முழு பென்சன் வழங்குவது போல தமிழக அரசும் 20 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முழு பென்சன் தர முன்வர வேண்டும். குறைந்தபட்ச பென்சன் ரூ.3,500 ஆக நிர்ணயிக்க வேண்டும். மருத்துவமனை அல்லாத சிகிச்சைக்கு வழங்கும் மாத மருத்துவப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். மாதத்தின் முதல் நாளில் பென்சன், குடும்ப பென்சனை வழங்க வேண்டும்.

58 வயது நிறைந்த மூத்த குடிமக்கள் மாநகர, நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யவும், புறநகர் பேருந்துகளில் 50 சதவீத கட்டண சலுகையுடன் பயணம் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள் என்ற வாக்குறுதியை அமல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட வேண்டும். மது, புகையிலைப் பொருட்களை அறவே ஒழிக்க தொடர் பிரச்சார இயக்கத்தை தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் வரும் 17-ம் தேதி பெருந்திரள் கவன ஈர்ப்பு அறவழி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து பென்சனர்கள், மூத்தக் குடிமக்கள் என 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்