ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்க நடவடிக்கை: சரத்குமார் கோரிக்கை

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் வீர விளையாட் டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நம் கலாச்சாரத்தையும், வீரத்தையும் எடுத்துக்காட்டும் பாரம்பரிய விளையாட்டாகும். முன்பு ஒருமுறை ஜல்லிக்கட்டு நடத்த நீதிமன்றம் தடைவிதித்த போது, தமிழக அரசு சிறப்பு சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

பின்னர் உச்ச நீதிமன்ற வழி காட்டுதல்படி, ஏறத்தாழ 77 கட்டளைகளைப் பின்பற்றி கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப் பட்டது.

மீண்டும் தடை

இப்போது மீண்டும் உச்ச நீதி மன்றம் இந்த வீர விளையாட்டுக்கு தடைவிதித்துள்ளது.

இச்சூழலில், தமிழர்களின் உரிமையை நிலைநாட்டுவதில் எப்போதும் முன்னோடியாக விளங்கும் மக்களின் முதல்வர், ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு தொடர்ந்து நடைபெறுவதற்கு ஆவன செய்து, ஜல்லிக்கட்டு நடத்தும் அறிவிப்பை இனிப்பான பொங்கல் செய்தியாக அறிவிக்க வேண்டும்.

அதுபோல, தமிழ்நாடு மட்டுமல்லாமல் மகாராஷ்டிரா, ஹரியாணா போன்ற மாநிலங் களிலும் மாடுபிடி விளையாட்டுகள் நடத்த வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிட மத்திய அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE