காப்பீட்டில் அந்நிய முதலீடு கண்டித்து எல்ஐசி முகவர் சங்கம் போராட்டம் அறிவிப்பு

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் அவசரச் சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் கூறியுள்ளது. இதுதொடர்பாக அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் (லிகாய்) மாநில தலைவர் எஸ்.ஏ.கலாம், பொதுச் செயலாளர் சோ.சுத்தானந்தம் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக அதிகரிக்க அனுமதிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது, நிலக்கரிச் சுரங்கங்களை தனியாருக்கு அளிப்பது ஆகியவை குறித்த சட்டத் திருத்தங்களை நாடாளுமன்ற மேலவையில் கொண்டுவந்து நிறைவேற்ற முடியாத நிலையில் இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ‘லிகாய்’ முகவர் களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கை மூலம், லட்சக்கணக்கான எல்ஐசி முகவர்கள், ஊழியர்கள், கோடிக்கான பாலிசிதார்களின் பாது காப்பை கேள்விக்குறியாக்கிவிட்டனர். எனவே, இந்த சட்டம் வாபஸ் பெறப்படும் வரை இதர சங்கங்களுடன் இணைந்து முகவர் சங்கம் போராடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE