விஜய் - மோடி சந்திப்பின் பின்னணி

By டி.எல்.சஞ்சீவி குமார்

மோடியை சந்திப்பது குறித்து ஒரு மாதம் முன்பிருந்தே நடிகர் விஜய் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கின்றனர் விஜய் ரசிகர் கள். விஜய்க்கு தமிழகத்தில் அரசி யல் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட் டதுதான், அவர் மோடியை சந்திக்க முக்கியக் காரணம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

தனது தந்தை எஸ்.ஏ.சந்திர சேகரன் மூலம் விஜய்க்கு அரசியல் ஆசை துளிர்விட்ட போது அவர் தேர்வு செய்தது காங்கிரஸ் கட்சியைத்தான். 2009 ஆகஸ்ட்டில் புதுவையின் அன்றைய முதல்வர் வைத்தியலிங்கம் முன்னிலையில் தனது மக்கள் இயக்கம் சார்பில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத் தைக் கூட்டி நலத்திட்ட உதவிகளை செய்தார் விஜய்.

அந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், ‘அரசியலுக்கு கட்டாயம் வருவேன். ஆனால், நிதானமாக வருவேன்’என்றார். சில தினங்களி லேயே டெல்லி சென்று ராகுல் காந்தியைச் சந்தித்தார். விஜய் தரப்பில் அப்போது மாநிலங் களவை உறுப்பினர் பதவியும் கேட்கப்பட்டதாக பேச்சுகள் அடிபட்டன. இதையடுத்து 2011-ல் விஜய் அன்னா ஹசாரேயை சந்தித்தார் அங்கேயும் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

தமிழகத்தில் விஜய் தரப்பினரும் திமுக-வினரும் நெருக்கமாகவே இருந்தனர். ஆனால், ’காவலன்’ படம் சிக்கலுக்குப் பின்னணியில் திமுக இருந்ததாக கருதி, திமுக-வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார் விஜய். அதன் பின்பு கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக-வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர் விஜய் ரசிகர்கள். ஆனால், ‘தலைவா’ பட விவகாரம் விஜய்யை விரக்தியின் உச்சிக்கே கொண்டுச் சென்றது.

இதற்கிடையே, விஜய்யின் ரசிகர்களும் மக்கள் இயக்க நிர்வாகிகளும் அவரை அரசியல் ரீதியாக முடிவு எடுக்கச் சொல்லி உசுப்பேற்றிக்கொண்டே வந்தனர். இந்த நிலையில்தான் விஜய்க்கு பாஜக-விடம் செல்லும் மன ஓட்டம் ஒரு மாதத்துக்கு முன்பே ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் ரஜினியை சந்தித்தார் மோடி. இதைத் தொடர்ந்துதான் பாஜக-விடம் செல்ல உறுதியான முடிவு எடுத்தார் விஜய்.

தற்போது பாஜக-வுக்கு குரல் கொடுப்பதன் மூலம் நாளை தனக்கு ஏதேனும் பிரச்சினை எழுந்தால் பாஜக மட்டுமின்றி, விஜயகாந்த், வைகோ ஆகியோரும் ஆதரவு கொடுப்பார்கள் என்று விஜய் நம்புகிறார்.

பாஜக தொடர்புகளுக்கான ஏற்பாடுகளை புதுச்சேரியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ-வும், ரசிகர் மன்ற நிர்வாகியுமான ஒருவர் முன்னின்று செய்ததாக கூறப்படுகிறது. வரும் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க விஜய் தனது ரசிகர்களுக்கு சிக்னல் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்