ஓசூரில் 65 யானைகள் விரட்டியடிப்பு

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட சானமாவு காப்புக்காட்டில் 65-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் கடந்த சில நாட்களாக முகாமிட்டிருந்தன. மேலும் நெல், ராகி, பீன்ஸ் உள்ளிட்ட தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசமாக்கின

இந்நிலையில் மாவட்ட வன அலுவலர் உலகநாதன் தலைமையில் வனச்சரகர்கள், வன ஊழியர்கள், வன நண்பர்கள் குழுவினர் கூட்டாக இணைந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சானமாவு காப்புக்காட்டிலிருந்து காவேரி வடக்கு வன உயிரின சரணாலயப் பகுதிக்கு விரட்டும் பணிகளை நேற்று முன்தினம் தொடங்கியது. ஒருவழியாக ஊடேதுர்க்கம் காப்புக்காட்டுக்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு யானைக் கூட்டம் விரட்டியடிக்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சானமாவு காப்புக்காட்டைச் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் நெற்பயிற்களை அறுவடை செய்து இழப்பை தவிர்க்குமாறு வனத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்