ஒரு டன் கரும்புக்கு ரூ.3500 விலை நிர்ணயிக்க வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கரும்பு விவசாயிகளின் உற்பத்தி செலவுகளை கணக்கில் கொண்டு ஒரு டன் கரும்புக்கு ரூ.3,500 விலை நிர்ணயிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பி யுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:

கடந்த ஆண்டு 9.5 சதவீத சர்க்கரை சத்துள்ள கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2,550 விலை நிர்ண யிக்கப்பட்டது. தற்போது, கரும்பு விவசாயிகளின் உற் பத்தி செலவுகள் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் டன் ஒன்றுக்கு ரூ.3,500 விலை நிர்ணயிக்க வேண்டும் என விவ சாயிகள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டை விட ரூ.350 குறைத்து ரூ.2,200 மட்டும் வழங்க வேண் டும் என்று சர்க்கரைத் துறை ஆணையர் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை நிர்வாகங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது அதிர்ச்சி யளிக்கிறது. ஏற்கெனவே தனி யார் சர்க்கரை ஆலைகள் விவ சாயிகளுக்கு ரூ.400 கோடி வரை பாக்கி தர வேண்டியுள்ளது. தனியார் சர்க்கரை ஆலைகளை கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக, இப்படி கடிதம் அனுப்பி யிருப்பது தனியார் சர்க்கரை ஆலைகளின் பிடிவாதத்தை ஊக்குவிப்பதாக உள்ளது.

எனவே, சர்க்கரை ஆலைகள் டன் ஒன்றுக்கு ரூ.3,500 வழங் கவும், ஏற்கெனவே வழங்கப் பட்டுவரும் விலையை தனியார் ஆலைகள் தருவதை உறுதிப் படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்