பெண்கள் தொழில் தொடங்க குறைந்த வட்டியில் ரூ.5 கோடி வரை கடன் வழங்கப்படும் என்று சிண்டிகேட் வங்கி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வங்கி வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ள தாவது:
சிண்டிகேட் வங்கி 'சிண்ட்மகிளா சக்தி' வாரத்தை டிச. 15 முதல் 20-ம் தேதி வரை கடைபிடிக்கிறது. இதனையொட்டி நாடு முழுவதும் 20 ஆயிரம் பெண்களுக்கு குறு, சிறு, நடுத்தர தொழில்களைத் தொடங்க கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி வரை கடன் பெறலாம். ரூ.10 லட்சம் வரையிலான கடனுக்கு அடிப்படை வட்டி (10.25%) விகிதத்திலும், அதற்கு மேல் கடன் பெற்றால் ஏற்கெனவே இருக்கும் வட்டி விகிதத்தில் 0.25 சதவீத தள்ளுபடியும் கிடைக்கும். மொத்த கடன் தொகையில் 15 சதவீதத்தை முன் பணமாக செலுத்த வேண்டும். பிராசஸிங் கட்டணம், ஆவணக் கட்டணம் கிடையாது. யாருடைய உத்தரவாதமும் தேவையில்லை. கடனை 7 முதல் 10 ஆண்டுகளில் திரும்பச் செலுத்த வேண்டும். கடனை சரியான முறையில் திரும்ப செலுத்துபவர்களுக்கு 0.5 சதவீத வட்டித் தொகையானது கடன் முடிவில் திரும்ப வழங்கப்படும். இதுமட்டுமின்றி அனுமதிக்கட்டணம் இல்லாத கிரெடிட் கார்டு வசதி, எஸ்.எம்.எஸ். பாங்கிங் வசதி, மொபைல் மற்றும் இன்டர்நெட் பாங்கிங் வசதி ஆகியவை கிடைக்கும். ‘சிண்ட்சுரக்ஷா' இன்சூரன்ஸ் மற்றும் ‘சிண்ட்ஆரோக்யா' மருத்துவக் காப்பீடு வசதியையும் பெற்றுக்கொள்ளலாம்.
மாவட்ட தொழில் மையம், தொண்டு நிறுவனங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆகியவை பரிந்துரை செய்யும் பெண்களுக்கும் கடன் கிடைக்கும். தொழில் குறித்த சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago