திமுக, அதிமுக ஆட்சியில் எந்த அளவு நன்மை நடந்ததோ அதே அள வுக்கு தீமைகளும் நடந்துள்ளன என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கூறினார். தமிழகத்தில் அடுத்த சட்டப்பேரவை தேர்தலை மனதில் கொண்டு தமாகாவை மீண் டும் தொடங்கியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன். திருச்சியில் கட்சியின் தொடக்கவிழா மாநாட்டை நடத்தி முடித்துள்ள நிலையில், ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:
நீங்கள் புதுக்கட்சி தொடங்க முக்கிய காரணம் என்ன?
கடந்த 2002-ல் தமாகாவை காங்கிரஸுடன் இணைத்தபோது, அக்கட்சியை வலுப்படுத்த வேண் டும் என்ற நோக்கம்தான் இருந்தது. ஆனால், தகுதியானவர்கள் கட்சி யில் ஓரங்கட்டப்பட்டதால், கட்சி வலுவிழந்தது. என்னுடன் இருந் தவர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். இதே நிலை நீடித்தால் நம் நிலை என்ன என்ற கேள்வி கட்சி யினர் மத்தியில் எழுந்ததே புதுக் கட்சி தொடங்க காரணமாக அமைந்தது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுக்கு கிடைத்த தண்டனை, நீங்கள் புதுக் கட்சி தொடங்க ஒரு தூண்டுகோலாக அமைந்ததா?
தொண்டர்களின் உணர்வை அடிப்படையாக வைத்துதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜெயலலிதா வுக்கு கிடைத்த தண்டனையை இதனுடன் முடிச்சுப் போட முடி யாது. அதெல்லாம் தலைவர்கள் போடும் கணக்கு. தலைவர்கள் நினைத்தால் எதுவும் நடந்து விடாது. தொண்டர்கள் நினைத்தால்தான் நடக்கும்.
மூப்பனார் கட்சி ஆரம்பித்தபோது அவருடன் சென்ற அனைவரும் இப்போது உங்களுடன் வந்திருக் கிறார்களா?
என் தந்தையுடன் என்னை ஒப்பிட விரும்பவில்லை. ஒரு சிலர் எங்க ளுடன் இல்லை. பெரும்பான்மை யினர் என்னுடன்தான் உள்ளனர்.
தேசியப் பார்வை கொண்ட மாநில கட்சியாக தமாகா இருக்கும் என்று கூறியிருக்கிறீர்கள். காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட விவகாரங்களில் உங்கள் நிலை?
இரு தரப்பு இடையே சண்டை நடக்கும்போது, சட்டம் என்ன சொல் கிறதோ அதை ஏற்க வேண்டும். கர்நாடகம், கேரளம் தங்கள் தவறை திருத்திக் கொண்டு தமிழகத்தின் நியாயமான நிலையை தலை வணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
முதல் இயக்கமாக வளர்வதற்கு உங்க ளுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன?
திமுக, அதிமுக கட்சியினர் ஆண்டவர்கள், ஆண்டு கொண் டிருப்பவர்கள். அவர்களது பலத்தை குறைத்து மதிப்பிட முடியாது. அவர்களது ஆட்சியில் எந்த அளவு நன்மை செய்தார்களோ, அந்த அளவு அவர்களால் தீமையும் உண்டு. அதற்கு மாற்றாக ஏன் நாங்கள் வரக் கூடாது?
மத்திய ஆட்சியில் பதவி வகித்து விட்டு, ஆட்சி போனதும் வெளியேறி யது துரோகம் என்கிறார்களே?
கடந்த 2002-ம் ஆண்டில் 23 எம்எல்ஏக்கள், ஒரு எம்.பி.யுடன் தமிழகத்தில் தமாகா மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது. காங் கிரஸ் எந்த வரிசையில் இருந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண் டும். என் தந்தை இறந்த ஒரு வருடத் தில் தமாகாவை காங்கிரஸுடன் இணைந்தோம். அப்போது மத்தி யில் பாஜக ஆட்சிதான் இருந்தது.
காமராஜர் போன்ற தலைவர்களின் பெயரை குறிப்பிடுவதில் ஏற்பட் டுள்ள சர்ச்சை பற்றி?
காங்கிரஸ் வளர்ச்சிக்கு வித்திட் டது காமராஜர், கக்கன், மரகதம் சந்திரசேகர், வாழப்பாடி ராம மூர்த்தி, மூப்பனார் போன்றோரின் உழைப்புதான். அவர்களது புகழை போற்றாமல் இருக்க முடியாது.
நீங்கள் அமைச்சரவையில் இருந்த போதுதான் 2ஜி, நிலக்கரி ஊழல் போன்ற பெரிய ஊழல்கள் நடந்துள் ளன. இப்போது அதற்கு வக்காலத்து வாங்க விரும்புகிறீர்களா? ஒதுங்கிக் கொள்ள விரும்புகிறீர்களா?
இந்தியா ஜனநாயக நாடு. ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு சுமத்து வது பல மாநிலங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நீங்கள் பதவியில் இருந்தபோது, யாருக்கும் பதவி வாங்கித் தர வில்லை என்ற மனக்குறை கட்சி யினர் மத்தியில் உள்ளதே?
மத்திய அமைச்சர், அகில இந்திய காங்கிரஸ் செயலர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் என 13 ஆண்டுகள் பதவியில் இருந்தேன். அப்போது மனசாட்சிப்படி நியாய மாக நடந்து கொண்டேனா என்ப தற்கு புதிய கட்சியின் தோற்றம், திருச்சி கூட்டமே சாட்சி. பதவியில் இருந்தபோது சிலருக்கு என்னால் பதவிகளை பெற்றுத் தர முடியாமல் போயிருக்கலாம். அது என் கையில் இல்லை.
நடிகை குஷ்பு, காங்கிரஸில் இணைந் தது அக்கட்சியை பலப்படுத்துமா?
ஜனநாயக நாட்டில் எந்த துறை யைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் எந்தக் கட்சியிலும் சேர லாம். அவர்களது செயல்பாடுகளை நீங்கள்தான் கணிக்க வேண்டும்.
தமிழகத்தில் மதுவிலக்கு அவசியம் என்று நினைக்கிறீர்களா?
பூரண மதுவிலக்குதான் எங்கள் கொள்கை. அந்த நிலை ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் நீங்கள் போட்டியிடப் போவதாக ஒரு தகவல் வெளிவருகிறதே?
அது தவறான தகவல்.
நிர்வாகிகள் நியமனம் எப்போது?
கொடி அறிமுகம் செய்துள் ளோம், கட்சிப் பெயர் அறிவித் துள்ளோம். உறுப்பினர் சேர்க்கை இன்னும் 2 நாட்களில் அறிவிக்க உள்ளேன். படிப்படியாக நிர்வாகி களை நியமனம் செய்து கட்சிக்கு முழு வடிவம் கொடுப்பேன்.
அதிமுக-வுடன் உங்கள் உறவு எப்படி இருக்கும்?
எல்லா கட்சிகளுடனும் நல் லுறவே வைத்துள்ளேன். யாருட னும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இல்லை. யாரையும் தனித் தராசில் வைத்து பார்க்க விரும்பவில்லை.
மூப்பனார் கட்சி ஆரம்பித்தபோது, திமுக-வுடன் கூட்டணி வைத்து பெரும் வெற்றி பெற்றார். அதே கூட்டணி மீண்டும் ஏற்படுமா?
தற்போது என் எண்ணமெல்லாம் தமாகா-வை சிறந்த இயக்கமாக உருவாக்க வேண்டும் என்பது தான். ஆனால், எங்கள் உயரம் என்ன என்பதை உணர்ந்து, தொண்டர்கள், மக்களின் எண்ணங் களைப் பொறுத்து முடிவெடுப்பேன். கூட்டணியே வைக்க மாட்டேன் என்று சவால்விட விரும்பவில்லை. தேர்தல் நேரத்தில் நியாயமான முடிவை எடுப்போம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago