10-வது ஆண்டு சுனாமி நினைவு தினம்: மீனவ அமைப்புகள், அரசியல் கட்சிகள் அஞ்சலி

10-வது ஆண்டு சுனாமி நினைவு தினம், சென்னை கட லோர கிராமங்களில் நேற்று அனு சரிக்கப்பட்டது. இதில் பல்வேறு மீனவ அமைப்புகள், அரசியல் கள் கட்சிகள் பங்கேற்று, உயிரிழந் தோருக்கு அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி தமிழகத்தை சுனாமி தாக்கியது. இதில் 7,923 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தின் 10-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப் பட்டது.

தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் அதன் தலைவர் அன்பழகன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற் பட்ட பெண்கள் பால் குடத்துடன் மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலையில் இருந்து ஊர்வல மாக சென்று கடல் நீரில் மலர் களை தூவி, பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் பட்டினப்பாக்கத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்கம், பருவத ராஜகுல இளைஞர் முன்னேற்ற சங்கத்தினர் மற்றும் மீனவ பெண்கள் பங்கேற்று, கடலில் பாலை ஊற்றி, மலர்களை தூவி சுனாமியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஊரூர் ஆல்காட்டு குப்பம் பகுதி யைச் சேர்ந்த மக்கள் அமைதி ஊர்வலம் நடத்தி, சுனாமியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினர்.

குழந்தை பெற அறுவை சிகிச்சை

பாஜக சார்பில் சுனாமி நினைவு தின நிகழ்ச்சி மெரீனா கடற்கரையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு சுனாமியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

சுனாமியில் குழந்தைகளை இழந்த பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து, அவர்களுக்கு மீண்டும் குழந்தை பிறக்க வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களுக்கு தொழிற்சங்கம், தனி அமைச்சகம் அமைக்க மத்திய பாஜக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 20 நாட்களில் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தது பாஜக அரசு தான் என்றார்.

நாகையில்..

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுனாமி 10-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இந்தியாவிலேயே அதிக அளவி லான உயிர்களையும், பொருளை யும் பலிகொண்ட நாகை மாவட் டத்தில் கடந்த பத்தாண்டில் பொருள் இழப்பை ஓரளவுக்கு ஈடுகட்டி விட்டாலும், உயிர் இழப்பின் வலியில் இருந்து இன்னமும் மீளவில்லை என்பதை மீனவ மக் கள் கடலோரத்தில் கூடி கண் ணீர் வடித்த காட்சி உணர்த்தியது.

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால், நாடாளு மன்ற உறுப்பினர் கோபால், நாகை மாவட்ட ஆட்சியர் முனுசாமி ஆகியோர் பேரணியாக ஆட்சியர் அலுவலகம் வந்து அங்குள்ள சுனாமி நினைவுத் தூணுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

அக்கரைப்பேட்டை மீனவ பஞ்சாயத்தார் மற்றும் பொது மக்கள் சுனாமி நினைவு தியான மண்டபத்தில் மலரஞ்சலி செலுத்தி னர். சுனாமியில் உயிரிழந்தவர் களுக்கு அஞ்சலி செலுத்தும் வித மாக வேளாங்கண்ணியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE