திமுக உட்கட்சித் தேர்தல் அதிருப்தி எதிரொலி: அழகிரி பிறந்த நாளில் மதுரையில் திரளும் அதிருப்தியாளர்கள்

உட்கட்சித் தேர்தலில் அதிருப்தி யில் இருக்கும் திமுக பிரமுகர் களை அழகிரி பிறந்த நாளில் மதுரையில் ஒன்று திரட்ட இருப்ப தாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

திமுக உட்கட்சித் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். ஸ்டாலினின் ஆதரவாளர்களான வேலுச்சாமி, தளபதி, மணிமாறன், மூர்த்தி ஆகியோர் மதுரை மாநகர் வடக்கு, தெற்கு மற்றும் புறநகர் தெற்கு, வடக்கு மாவட்டங்களின் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அழகிரி ஆதரவாளர்கள் பல ருக்கு மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டங்களில் வட்டச் செயலாளர் மற்றும் கிளைச் செய லாளர்கள் பதவிகள்கூட வழங்கப் படவில்லை. கட்சியைவிட்டு விலக்கி வைக்கப்பட்டுள்ள அழகிரியும் உட்கட்சித் தேர்தலில் எவ்வித ஆர்வமும் காட்டவில்லை.

அழகிரியின் அதிதீவிர விசுவாசியாக இருந்து, அண்மைக் காலத்தில் அவருக்கே சவால் விட்டு ஸ்டாலின் பக்கம் தாவிய வர் முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் ஜெயராம். இவர் மதுரை மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியை எதிர்பார்த் தார். ஆனால், இவரை தலைமைச் செயற்குழு உறுப்பினராக்கிவிட்டு, முன்னாள் மாவட்டச் செயலாளர் தளபதியையே மாவட்டச் செய லாளராக்கிவிட்டார் ஸ்டாலின்.

இந்நிலையில், மதுரை மாவட் டத்தில் உட்கட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் உள்பட சுமார் 150 பேர் கடந்த சனிக் கிழமை சென்னை வந்து கருணா நிதியையும் ஸ்டாலினையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றிருக் கிறார்கள். அப்போது, பட்டு வேட்டி ஒன்றை ஸ்டாலினுக்குப் போர்த்திய ஜெயராம், ‘எனது அரசியல் வாழ்க்கையே நிர்மூல மாகிருச்சு அண்ணே’ என்று கண் கலங்கினாராம். அதற்கு, ‘எல்லாரும் அவரோட (அழகிரி) இருந்திருந்தா பதவி கிடைச் சிருக்கும்னு நினைக்கிறாங்களா?’ என்று ஜெயராமின் காதுபடவே ஸ்டாலின் சொன்னாராம். இத னால் மன வருத்தத்துடன் மதுரை திரும்பி இருக்கிறார் ஜெயராம்.

ஜெயராமை ஒதுக்கியது ஏன்?

இதுகுறித்து ’தி இந்து’விடம் பேசிய மதுரை மாநகர் திமுக-வினர், ’’அழகிரியை பகைத்துக் கொண்டு ஸ்டாலின் பக்கம் தாவிய ஜெயராம் ஸ்டாலினை வைத்து மதுரைக்குள் கூட்டங்களையும் நடத்தினார்.

மாவட்டச் செயலாள ராக வந்துவிட வேண்டும் என் பதற்காக தனக்கு விசுவாசமான பலரை வட்டச் செயலாளர்களாக் கினார். ஆனால், என்ன காரணத் தினாலோ அவரை ஒதுக்கிவிட்டு தளபதியை மாவட்டச் செயலாள ராக்கி விட்டார் ஸ்டாலின்.

மதுரையின் பிற மாவட்டச் செயலாளர்கள் 3 பேர் முக்குலத்தோராக இருப்பதால் முக்குலத்தோர் அல்லாத ஒருவருக் கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக தளபதிக்கு வாய்ப்பளித்திருப்பதாகச் சொல் கிறார்கள்.

இந்த நிலையில், வருத்தத்தில் இருக்கும் ஜெயராம் உள்ளிட்ட சிலர் மீண்டும் அழகிரி பக்கம் சாய்வதற்கு தூது அனுப்பி இருக்கிறார்கள். ஆனால், ’என்னையும் என் குடும்பத்தையும் விமர்ச்சித்துவிட்டுப் போனவர்கள் அங்கே இன்னும் கொஞ்சம் அடிபடட்டும்; அப்பத்தான் புத்தி வரும்’ என்று சொல்லிவிட்டார் அழகிரி’’ என்று சொன்னார்கள்

இதனிடையே, அனைத்து மாவட்டங்களிலும் ஸ்டாலினின் உட்கட்சித் தேர்தல் வியூகத்தில் தோற்றுப்போன முக்கியப் பொறுப் பாளர்கள் பலர் அழகிரி தரப்போடு தொடர்ந்து பேசிவருகிறார்கள். இதையடுத்து, அதிருப்தியில் இருக்கும் திமுக-வினரை ஜனவரி 30 அழகிரி பிறந்த நாளில் மதுரையில் ஒன்றுதிரட்டுவதற்கான வேலைகள் நடக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE