நோக்கியா நிறுவனம் ரூ.2 ஆயிரத்து 400 கோடியை வாட் வரியாக செலுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வணிக வரித்துறை துணை ஆணையர் மீண்டும் ஆய்வு செய்து புதிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் நோக்கியா நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு பதிலாக, இந்திய உள்நாட்டு சந்தையில் பெருமளவு செல்போன்களை விற்பனை செய்துள்ளதாகவும், அதனால் அரசுக்கு ரூ.2 ஆயிரத்து 400 கோடி வாட் வரியாக செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இதை எதிர்த்து நோக்கியா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனு மீது நீதிபதி பி.ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டார். அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி, உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்த செல்போன்களுக்கான வாட் வரியை நோக்கியா நிறுவனம் அரசுக்கு செலுத்த வேண்டும் என்று வாதிட்டார்.
நோக்கியா நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பி.தத்தார், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த செல்போன்களுக்கும் சேர்த்து வரி செலுத்துமாறு அரசு கூறியுள்ளது. நோக்கியா நிறுவனம் தங்கள் தரப்பு விளக்கங்களை அளிக்க உரிய வாய்ப்பு தராமல் தமிழக அரசின் வணிக வரித் துறை பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராஜேந்திரன், நோக்கியா நிறுவனம் ரூ.2 ஆயிரத்து 400 கோடி வாட் வரி செலுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் வணிக வரித் துறை துணை ஆணையர் மீண்டும் ஆய்வு நடத்தி புதிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். அப்போது நோக்கியா நிறுவனம் தங்கள் தரப்பு கருத்தைத் தெரிவிக்க, போதிய அவகாசம் அளிக்க வேண்டும். தேவையான எல்லா ஆவணங்களையும் வணிக வரித் துறையிடம் நோக்கியா நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், தமிழக அரசு கூறியுள்ள வாட் வரித் தொகையில் 10 சதவீதத் தொகையை மட்டும் 8 வாரங்களுக்குள் அரசிடம் அந் நிறுவனம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago