அடுத்த ஆண்டு முதல் பிளஸ்-2 தட்டச்சு தியரி தேர்வு செய்முறைத் தேர்வாக மாற்றப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளி யிட்டுள்ள உத்தரவில் கூறியிருப் பதாவது:-
பிளஸ்-2 தொழிற்கல்வி பாடப் பிரிவில் அலுவலக செயலாண்மை பாடத்தொகுப்பில் உள்ள தட்டச்சு செய்முறை-1 தேர்வு இதுநாள் வரையில் கருத்தியல் தேர்வுகளில் (தியரி) ஒன்றாக நடத்தப்பட்டு வந்தது.
இருந்த போதிலும், இப்பாடம் முற்றிலும் செய்முறைத் தேர்வு சம்பந்தப்பட்ட பாடத்தொகுப்பி லேயே உள்ளதால் பிற செய் முறைத் தேர்வுகளைப் போல இந்த பாடத்தையும் செய்முறைத் தேர்வாக நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அரசின் இந்த உத்தரவு மூலம் 2015 மார்ச் முதல் தட்டச்சு பாட தேர்வு செய்முறைத் தேர்வாக முன்கூட்டியே, அதாவது பிப்ரவரி மாதவாக்கில் நடத்தப்படும்.
தட்டச்சு தியரி தேர்வை செய்முறைத் தேர்வாக மாற்றும் அரசின் முடிவை தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி தொழில்கல்வி ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்றுள் ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தொழில்கல்வி பாடமான தட்டச்சு பாடம் கடந்த 1978-79-ம் கல்வி ஆண்டு முதல் எழுத்துமுறை பாடமாக இருந்து வந்தது. இதை செய்முறைத் தேர்வாக மாற்றி யதை வரவேற்கிறோம். தட்டச்சு பாடமானது, தட்டெழுத்தும், கணிப் பொறி இயக்கமுறையும் என்ற பெயரில் உள்ளது.
எனவே, கணிப் பொறி இயக்க முறை குறித்து தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்க வேண்டும்” என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago