விற்பனை பிரதிநிதிகள் வேடத்தில் கொள்ளைக்காரிகள்: வீடுகளில் தனியாக இருப்போர் பாதுகாப்பாக இருப்பது எப்படி? போலீஸ் அறிவுரை

விற்பனை பிரதிநிதிகள் போல வந்த 2 பெண்கள் நோட்டம் பார்த்து சென்று தகவல் கொடுத்ததன்பேரில் வில்லிவாக்கத்தில் வங்கி அதிகாரியின் வீட்டுக்குள் புகுந்த 4 கொள்ளையர்கள், தனியாக இருந்த வங்கி அதிகாரியின் மனைவியை கட்டிப்போட்டு கொள்ளையடித்துச் சென்றனர். இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகளான காவல் ஆய்வாளர்கள் சிவக்குமார், பாலசுப்பிரமணியன் ஆகியோர் கொள்ளையர்களை கண்டுபிடித்து 6 பேரை கைது செய்தனர்.

வியாசர்பாடியை சேர்ந்த ராஜேஷ், ஜெகன், மதுரை வீரன், ராஜ்குமார், தாட்சாயிணி, ஷீலா ஆகிய 6 பேர்தான் இந்த கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ராஜேஷ், ஜெகன், மதுரை வீரன் ஆகிய 3 பேரும் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த மாதம்தான் விடுதலையாகியுள்ளனர். ராஜ்கு மாரும், தாட்சாயிணியும் காதலர் கள் . தாட்சாயிணி விற்பனை பிரதிநிதியாக வேலை பார்ப்பவர். ராஜ்குமார் கூறியதன்பேரில்தான் தனியாக இருக்கும் பெண்களின் வீட்டை நோட்டமிட்டிருக்கிறார் தாட்சாயிணி.

கொள்ளை நடந்த வங்கி அதிகாரியின் அடுக்குமாடி குடியி ருப்புக்குள் தாட்சாயிணியும், ஷீலாவும் வெவ்வேறு பொருட் களை விற்பதற்காக அடிக்கடி சென்றுள்ளனர். இதனால் குடியி ருப்பில் வசிக்கும் பெண்களில் பலருக்கு இருவரையும் நன்றாக தெரிந்துள்ளது. ஆனால், இரு வரும் நல்லவர்கள்போல பழகி அங்கிருக்கும் பெண்களை நோட்டம் பார்த்து, வங்கி அதிகாரியின் வீட்டை தேர்ந்தெடுத் துள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது.

போலீஸ் அறிவுரை

காவல் ஆய்வாளர் சிவக் குமார் கூறுகையில், "காலிங் பெல் அடித்தவுடன் கதவைத் திறக்காமல் வந்திருப்பது யார் என்று உறுதிசெய்ய வேண்டும். கதவில் லென்ஸ் அல்லது கதவை கொஞ்சம் மட்டும் திறக்கும் சங்கிலி வைப்பது அவசியம். அறிமுகம் இல்லாதவர்களை அனு மதிக்க வேண்டாம். மரக் கதவுக்கு முன்னால் ஒரு இரும்புக் கதவு அமைப்பது கூடுதல் பாதுகாப்பு.

தனியாக இருந்த பெண்ணிடம், ‘உங்கள் கணவரின் நண்பர் நாங்கள், திருமண பத்திரிகை கொடுக்க வந்துள்ளோம்’ என்று கூறி உள்ளே நுழைந்து கட்டிப்போட்டு கொள்ளையடித்த சம்பவங்களும் நடந்துள்ளன. நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும். அறிமுகமில்லாதவர் தண்ணீர் கேட்டால், தண்ணீர் எடுப்பதற்காக கதவைத் திறந்து வைத்துவிட்டு வீட்டின் உள்ளே செல்லவே கூடாது.

மின்சாதனப் பொருட்கள், குழாய் உள்ளிட்டவற்றை சரி செய்ய தனியாக இருக்கும்போது யாராவது வந்தால் அவர்களை பிறகு வாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிடுங்கள். போனில் சத்தமாக பேசக் கூடாது. வெளி யிடங்களுக்கு செல்லும்போது, புதிய நபர்களிடம் உங்களைப் பற்றிய விவரங்களை சொல் லவே கூடாது. அறிமுகம் இல்லாதவர் களிடம் பேசும்போது, வீட்டில் யாரும் இல்லை, தனியே இருக் கிறேன் என்று சொல்ல வேண்டிய சமயங்களில், இன்னொருவர் தூங்கிக் கொண்டோ, குளிய லறையிலோ இருப்பதாகச் சொல் வது நல்லது. வாசலில் நிற்பவர் களை பார்க்க முடியாதபடி இருக்கும் வீடுகளில் கதவைத் திறக்காமல் பேசுவது நல்லது. அறிமுகம் இல்லாதவர்கள் நம்மைப்பற்றி எப்படி நினைத் தாலும் அது நம்மைப் பாதிக்கப் போவதில்லை.

ஒவ்வொரு வீட்டிலும் தனி யாக வசிக்கும் பெண்கள், வயதா னவர்கள் அருகிலுள்ள போலீஸ் நிலைய எண், தீயணைப்புத்துறை எண், அவசர போலீஸ் எண் மற்றும் தங்களுக்குத் தெரிந்த போலீஸ் அதிகாரிகளின் எண் போன்றவற்றை ஒரு டைரியில் எழுதியோ அல்லது போனில் ஸ்பீடு டயலில் பதிவு செய்தோ வைத்திருக்கலாம். பேப்பரில் எழுதி சுவரிலும் ஒட்டலாம். பெப்பர் ஸ்பிரே போன்ற எளிதாக பயன் படுத்தும் வகையிலான பாதுகாப்பு உபகரணங்களை வாங்கி வீட்டில் வைக்க வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE