பாஜக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியது வரவேற்கத் தக்கது என்று கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், சிபிஐ (எம்எல்), எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) ஆகிய கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மத்திய அரசின் பொருளாதார கொள்கைக்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தின.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் பேசும்போது, ‘‘இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மத்திய அரசு இதுவரை எந்த நிவாரணமும் அளிக்கவில்லை.
இந்நிலையில், தேசிய ஜன நாயக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறி இருப்பது வரவேற்கத்தக்கது.
இனிவரும் நாட்களில் மத்திய அரசின் பொருளாதார கொள் கைக்கு எதிராக நடக்கும் கூட்டுப் போராட்டங்களில் வைகோ கலந்து கொள்ள வேண்டும்” என்றார்.
ஜி.ராமகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன் பேசும்போது, ‘‘சாதாரண மக்களுக்கு வாழ்வாதாரம் அளித்து வந்த 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு படிப்படியாக குறைத்துக் கொண்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்துக்கு அடிப்படை யாக இருந்த காப்பீடு மற்றும் பொதுத்துறை பங்குகளை விற்க முடிவு செய்திருப்பது மக்கள் விரோத போக்காகும். பகவத்கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்திருப்பது இந்துத்வா கொள்கையை முன்னிறுத்தும் செயலாகும். பாஜக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியது வர வேற்கத்தக்கது’’ என கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago