இலங்கை சிறையில் அடைக்கப் பட்டுள்ள தமிழக மீனவர்கள் 81 பேரில், 66 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
டிசம்பர் 9-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த 14 மீனவர் களை 2 விசைப்படகுகளுடனும், காரைக்கால் கோட்டுச்சேரி, காசாகுடிமேடு பகுதிகளைச் சேர்ந்த 29 மீனவர்களை 3 விசைப் படகுகளுடன் என மொத்தம் 43 மீனவர்களையும், 5 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
தமிழக மீனவர்களின் காவல் நேற்றுடன் முடிவடைந் ததையடுத்து, 43 பேரும் பருத் தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள், காரைக்காலைச் சேர்ந்த 14 மீனவர்கள் என மொத்தம் 28 மீனவர்களை மட்டும் விடுதலை செய்தும், எஞ்சிய 15 மீனவர்களுக்கு ஜனவரி 5-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து மேலும் 38 மீனவர்கள் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர். இவர்கள் நாகை, புதுக்கோட்டை, ராமேசு வரத்தை சேர்ந்தவர்கள். 66 மீனவர் களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி மூர்த்தியிடம் ஒப்படைக்கப் பட்டனர். இவர்கள் அனைவரும் இன்று தனிக்கப்பலில் அழைத்து வரப்பட்டு இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படுவர்.மீனவர் களை வரவேற்க அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர்.
இலங்கை மீனவர்கள்
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையின் பேரில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 30 பேரை விடுவிக்க மீன்வளத்துறை தரப்பில் பரிந்துரைக்கப்பட்டது. அதன் பேரில் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு செய்ததையடுத்து, இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் 30 பேரும் இலங்கை கடற்படையிடம் இன்று ஒப்படைக் கப்படுகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago