பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றுவது முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கம் என்று முன்னாள் அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலருமான சற்குணபாண்டியன் பேசினார்.
விருதுநகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ரத்தினவேலுக்கு ஆதரவுகோரி விருதுநகரில் புதன்கிழமை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
சொத்து குவிப்பதிலேயே ஜெயலலிதாவின் கவனம் இருக்கும். அவர் சொத்து மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடியாம். திமுக ஆட்சிக் காலத்தில் எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என ஜெயலலிதா கூறிவருகிறார். திருமண உதவித் திட்டம், பேறுகால நிதி உதவித் திட்டம், விதவைகளுக்கான நிதி உதவித் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக் களைத் தொடங்கி ஒரு குழுவுக்கு ரூ10 ஆயிரம் சுழல்நிதி வழங்கியது அனைத்தும் திமுக ஆட்சிக் காலத்தில்தான். பொய்களை அடுக்கடுக்காகச் சொல்லி மக்களை ஏமாற்றுவது ஜெயலலிதாவின் வழக்கம்.
பொடா சட்டத்தில் வைகோ கைது செய்யப்பட்டிருந்தபோது அவரை சிறையிலும், நீதிமன்றத்திலும் காத்திருந்து சந்தித்தவர் கருணாநிதி. பொடா சட்டத்தை ரத்துசெய்ய வைத்தவரும் அவர்தான்.
இன்று திசைமாறிச்செல்லும் துரோகத்தைச் செய்துகொண்டிருக் கிறார் வைகோ. சேது சமுத் திரத் திட்டம் தொடங்கப்பட்டபோது அதற்கு முழு ஆதரவு அளித்த வைகோ, அத்திட்டம் நிறுத்தப் பட்டபோதும், அதன் பின்னரும் சேது சமுத்திரத் திட்டம் பற்றி எதுவும் சொல்லாத பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது வைகோ வுக்கு அதைவிட அவமானம் இல்லை.
திமுக ஆட்சியில் 6 மின் உற்பத் தித் திட்டங்கள் நிறைவேற்றப்பட் டன. அவற்றை சரியாகப் பராமரிக் காத காரணத்தால் ஒரு மெகாவாட் மின்சாரம்கூட உற்பத்தி செய்யத் திறனற்றவர் ஜெயலலிதா என் கிறார்கள் மின்வாரிய அதிகாரிகள். நமக்காக இரக்கப்படுபவர் யார் என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அமைதி, வளம், வளர்ச்சி இருக்கும் என்று பிரச்சாரம் செய்கிறார். இன்று அவர் ஆட்சியில்தான் போலீஸ் வீட்டிலும் எம்.எல்.ஏ. வீட்டிலும் கொள்ளை நடக்கிறது.
10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் தெருவில் நடமாட பயப்படுகின்றனர் காலையில் கோலம் போடும் பெண்களிடம் வழிப்பறி போன்ற சம்பவங்களும் இங்குதான் நடக்கின்றன. நீதி தாமதமானாலும் வென்றே தீரும். அந்த வெற்றிக்கு நாம் உறுதுணை யாக இருப்போம் என்றார்.
திமுக வேட்பாளர் ரத்தினவேலுவை ஆதரித்துப் பேசுகிறார் சற்குணபாண்டியன்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago