தெருவிளக்கு கம்பத்தில் மின்கசிவு: நாய் பலியானதால் உயிர் தப்பிய மாணவர்

By எஸ்.சசிதரன்

சென்னையில் நேற்று அதிகாலை யில் திடீரென மழை பெய்தது. பெரம்பூர் செம்பியம் குருசாமி தெரு மற்றும் ஆண்டியப்பன் தெரு சந்திப்பில் தண்ணீர் தேங்கியிருந்தது. காலை 6.30 மணியளவில் அந்த வழியாக வந்த ஒரு நாய், திடீரென மின் சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு இறந்தது. இதைப் பார்த்ததும் பின்னால் வந்துகொண்டிருந்த பள்ளி மாணவர், அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சசிகுமார் கூறும்போது, ‘‘காலை 6 மணியளவில் இந்த வழியாகச் சென்ற ஒரு முதியவர், ஷாக் அடிப்பதுபோல் உள்ளதாக கூறினார். தெருவிளக்கு கம்பத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட்டிருக் கலாம் என நினைத்தேன். இதனால், சிறிது நேரம் அங்கேயே நின்று, வருவோர் போவோரை எச்சரித்தேன். பின்னர் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, மின்சாரம் பாய்ந்து நாய் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தேன். இதுகுறித்து தகவல் தந்ததும் மாநகராட்சி ஊழியர்கள் வந்து தெருவிளக்கு மின் இணைப்பை துண்டித்தனர்’’ என்றார்.

உயிர் தப்பிய பள்ளி மாணவர் டேனிஷ் கூறும்போது, ‘‘நாய் மட்டும் இறக்காமல் இருந்திருந் தால், நான் அந்தப் பகுதியை கடந்திருப்பேன். என் மீது மின்சாரம் பாய்ந்திருக்கும். நாயால் உயிர் பிழைத்தேன்’’ என்றார்.

மின்சாரம் பாய்ந்து இறந்த நாயை அப்பகுதியில் உள்ள சில தெரு நாய்கள் சோகத்துடன் முகர்ந்து பார்த்துவிட்டு சென்றது உருக்கமாக இருந்தது.

மாநகராட்சி விளக்கம்

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தெருவிளக்கு கம்பத்தில் இருந்து தான் மின்கசிவு ஏற்பட்டதா என்பது தெரியவில்லை. அதுபற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்