ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்துக் கணக்கை டிச.31-க்குள் காட்ட வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

அரசின் உயர் பொறுப்பிலுள்ள ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் அனை வரும் வரும் 31-ம் தேதிக்குள் தங்களது சொத்துக்கணக்கை மத்திய அரசுக்கு தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஆண்டுதோறும் பொது வாழ்வில் ஈடுபடும் அரசு ஊதியம் பெறும் அமைச்சர்கள், அதிகாரிகள், ஊழியர்களின் சொத்து விவரங்களைப் பெற்று, அதனை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடும்.

இந்த ஆண்டும் சொத்துக் கணக்கைக் காட்ட அனைத்து அரசு உயர் அதிகாரிகளுக்கும் உத்தர விடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய பணியாளர் நிர்வாகத் துறையிலிருந்து, தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது.

லோக் ஆயுக்தா, லோக் பால் சட்டப்படி

அதில், மத்திய அரசின் லோக் பால், லோக் ஆயுக்தா சட்டத் தின் அடிப்படையில், அரசு பொறுப்பிலுள்ள முக்கிய அதிகாரி கள், குறிப்பாக ஐ.ஏ.எஸ்., அதி காரிகள் அனைவரும் தங்களது சொத்துக் கணக்கை வெளிப்படையாக மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். இதன்படி இந்த ஆண்டுக்கான சொத்துக் கணக்கு விவரங்களை, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், அதற்கு இணையான, வரைமுறைப் படுத்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் வரும் 31-ம் தேதிக்குள், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பொதுமக்கள் பார்வைக்காக..

வெளிப்படையாக சொத்துக் கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவை பொதுமக்களின் பார்வைக்காக மத்திய அரசின் இணைய தளத்தில் வெளியிடப்படும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE