காவிரியின் குறுக்கே புதிய அணை: தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வைகோ கோரிக்கை

காவிரி ஆற்றின் குறுக்கே 2 தடுப்பணைகளை கட்டவுள்ள கர்நாடக அரசின் செயலுக்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ள கர்நாடக அரசின் செயலுக்கு டெல்டா மாவட்டங் களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அணை கட்டுவதை கண்டித்து டெல்டா மாவட்ட விவசாயிகள் வரும் 22-ம் தேதி கடையடைப்பு, சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இப்பிரச்சினை தொடர்பாக டெல்டா விவசாய சங்க பிரதிநிதிகள் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சென்னையில் நேற்று சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்புக்கு பின் செய்தி யாளர்களிடம் வைகோ கூறியதா வது: காவிரி நதியால் 12 மாவட் டங்கள் பயன்பெற்று வருகின்றன.

தமிழகத்தில் 3 கோடி விவசாயிகள் மற்றும் 75 சதவீத மக்களின் வாழ்வாதாரமாக காவிரி உள்ளது. இந்த நிலையில் மேகதாது என்ற இடத்தில் 2 அணைகளை கட்டப்போவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதனைத் தடுக்க தமிழக மக்கள், அரசியல் கட்சிகள், வணிகர்கள் என அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.

தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களில் வருகிற நவம்பர் 22-ம் தேதி சாலை மறியல், ரயில் மறியல், கடைய டைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடக்கவுள்ளன.

ரயில் மறியல்

இதில் தஞ்சையில் நடை பெறும் ரயில் மறியலில் நான் பங்கேற்கவுள்ளேன். மேலும் வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன், வணிகர் சங்கப் பேரமைப்பு தலைவர் விக்கிர மராஜா ஆகியோர் 22-ம் தேதி நடைபெறும் கடையடைப்புக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE