பேரவையை கூட்டச் சொன்னால் பன்னீர்செல்வம் பதற்றமடைவது ஏன்? - திமுக தலைவர் கருணாநிதி கேள்வி

மக்களின் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் எனச் சொன்னால், முதல்வர் பன்னீர்செல்வம் பதற்ற மடைவது ஏன் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது:

தமிழக மக்களின் உயிர்நாடி யான பிரச்சினைகள் பல எழுந்துள்ளன. அவசர முக்கியத் துவம் வாய்ந்த அந்தப் பிரச்சினை களைப் பற்றி விவாதிப்பதற்காக சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என்று நான் மட்டுமல்ல, பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர் களும் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பேரவையைக் கூட்டு என்றால் முதல்வர் பன்னீர்செல்வம் பெரிதும் பதற்றமடைகிறார். ஒருவேளை பேரவையைக் கூட்டினால், தான் எங்கே அமர்வது? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமர்ந் திருந்த இடத்திலேயே அமர முடியுமா?

ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை, நான் சட்டப்பேரவைக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக வேண்டுமென்றே இடவசதி செய்து தரவில்லை. முதல்வர் பன்னீர்செல்வமாவது எனக்கு உரிய இடவசதி செய்து கொடுப்பாரா? திமுக ஆட்சியில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமைதியாக இருந்து ஜெயலலிதா படித்த உரையைக் கேட்டார்கள். அப்போது திமுக உறுப்பினர்கள் கடைபிடித்த கண்ணியத்தைப் போல, இப்போது அதிமுக உறுப்பினர்கள் நிச்சயம் கடை பிடிப்பார்கள் என்று உறுதி செய்துகொண்டு, பன்னீர்செல்வம் அறிவிப்பாரானால், சட்டப் பேரவைக்கு செல்வதற்குத் தயாராகவே இருக்கிறேன்.

திமுகவை வசைபாடவே சென்னை மாநகராட்சி மன்றத்தைக் கூட்டுகின்றனர். சென்றமுறை மாநகராட்சி மன்றக் கூட்டம் நடந்தபோதும், சுமார் ஒன்றரை மணி நேரம் என்னையும், மு.க.ஸ்டாலினையும் மேயர் சைதை துரைசாமி வசை பாடினார். மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதி பிரச்சினைகளை எடுத்துச் சொல்லித் தீர்வு காண்பதற்கான வாய்ப்பையும் மறுத்து வருகிறார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு களுக்கு தற்போது நிர்ணயம் செய்துள்ள வயது வரம்பினை யும், தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகளின் எண்ணிக்கை யையும் குறைத்தால், அதனால் பெரிதும் பாதிப்புக்கு ஆளாவது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்களே. கிராமப்புற மாணவர்களும் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படுவர். எனவே, இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தைப் போக்கி, தற்போதுள்ள வரம்பு களில் எந்த மாற்றமும் இல்லை என்ற அறிவிப்பைச் செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கை யில் கருணாநிதி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE