169 பேருக்கு ‘உயர்ந்த உழைப்பாளர்’ விருதுகள்: அமைச்சர் மோகன் வழங்கினார்

சென்னையில் நடந்த விழாவில் 169 தொழிலாளர்களுக்கு ‘உயர்ந்த உழைப்பாளர் விருது’களை தமிழக ஊரகத் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன் வழங்கினார்.

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தேசிய பாதுகாப்பு குழுமம் சார்பில் 197 நிறுவனங்களுக்கு தொழிற்சாலை கள் பாதுகாப்பு விருதுகள் மற்றும் 169 பேருக்கு ‘உயர்ந்த உழைப் பாளர் விருதுகள்’ வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில், சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கு நர் சி.ஞானசேகர பாபு ராவ் வரவேற் புரை ஆற்றினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் ப.மோகன், விருதுகளை வழங்கி பேசியதாவது: தொழில் நிறுவனங்களை ஊக்குவிக் கும் வகையிலும் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2011 மே மாதத்தில் 38,601 ஆக இருந்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை தற்போது 42,288 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் விபத்துகளை குறைக்கும் வகையில் 3 ஆண்டுகளில் இதுவரை 1,444 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் வெடி விபத்துகளை குறைக்கும் வகையில் நிரந்தர பயிற்சி மையம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு அளிக்கப்பட்டு வரும் தொடர் பயிற்சியால் பட்டாசு வெடி விபத்து குறைந்து வருகிறது.

கட்டுமானத் தொழிலாளர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.127.13 கோடி மதிப்பில் அறிவிப்புகளை தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவித்தது. அதன்படி, விபத்தில் இறக்கும் தொழி லாளியின் குடும்ப நிதியுதவி ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் மட்டுமே 1.18 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.25.91 கோடி அளவுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தொழிற்சாலை நிர்வாகத்தினரை ஊக்குவிக்கும் வகையில் மாநில பாதுகாப்பு விருதில் முதல் பரிசு ரூ.2,500 இருந்து ரூ.5 ஆயிரமாக வும், 2-ம் பரிசு ரூ.1,500 இருந்து ரூ.4 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள் ளது. உயர்ந்த உழைப்பாளர் விருது களின் எண்ணிக்கையும் 24-ல் இருந்து 43 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவ் வாறு அமைச்சர் மோகன் பேசினார்.

விழாவில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளர் மா.வீரசண்முகமணி, எம்எல்ஏ பழ.கருப்பையா ஆகியோர் பேசினர். இறுதியில் திருச்சி தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் பி.போஸ் நன்றி கூறினார். 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE