மீட்டர் போட மறுத்து: ஆட்டோ டிரைவர்கள் மறியல்

By செய்திப்பிரிவு

சென்னை நகரில் ஆட்டோக் களில் மீட்டர் கட்ட ணத்தை மட்டுமே வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் மீட்டர் போட்டு பயணிகளை ஏற்ற மறுக்கிறார்கள்.

போக வேண்டிய இடத்துக்கு பேரம் பேசி அதிக கட்டணம் கேட்கிறார்கள். இதுகுறித்து போக்குவரத்து போலீசாருக்கும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் ஏராளமான புகார்கள் வந்தன.

இதையடுத்து, போக்குவரத்து போலீஸாரும் நேற்று முன்தினம் முதல் ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர். இதில் 300-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக் கப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீஸாரின் நடவடிக்கை களை கண்டித்து எழும்பூர் ரயில் நிலையம் வீரன் அழகு முத்து சிலை அருகில் நேற்று காலை யில் ஏராளமான ஆட்டோ டிரை வர்கள் ஒன்று சேர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் ஆட்டோ டிரைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை கலைந்துபோக வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE