உதவி புவியியலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

தமிழக அரசின் தொழில் சார்நிலைப் பணியில் உதவி புவியியலாளர் (ஜியாலஜிஸ்ட்) காலியிடத்தை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி ஆன்லைன் தேர்வு நடத்தப்பட உள்ளது.

ஜியாலஜி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 17-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpscexams.net) விண்ணப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு, பாடத் திட்டம், தேர்வுமுறை, தேர்வு மையம் உள்ளிட்ட விவரங் களை இணையதளத்தில் விரிவாக தெரிந்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE