‘தி இந்து’ செய்தி எதிரொலி: சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் அடுத்த திருக்காளி மேடு பகுதியில் சாலை விரி வாக்கம் மற்றும் மழைநீர் கால் வாய் அமைப்பதற்காக ஆக்கிர மிப்புகள் அகற்றும் நடவடிக்கை தொடங்கியது. இதுகுறித்து ‘தி இந்து’ வில் செய்தி வெளி யான நிலையில் நகராட்சி அதிகாரி கள் நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர்.

காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதியில் உள்ள கவரைத் தெரு நகராட்சி குப்பை கிடங்குக்கு செல்லும் பிரதான சாலையாகும். இந்த சாலையில் மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக கடந்த ஜூன் மாதம் நகராட்சி பொதுநிதியில் ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பணிகள் தொடங்கப் பட்டன. ஆனால், சாலையில் ஆக்கிரமிப்புகளால் நகராட்சியின் குப்பை வாகனங்கள் செல்லும் போது மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து, ‘தி இந்து’ நாளி தழில் கடந்த ஜூலை மாதம் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, மழைநீர் கால்வாய் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் நகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில் பொறியாளர்கள் மற்றும் நில அளவீட்டார்கள் மூலம் கவரைத்தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து நேற்று அளவீடு செய்தனர். மேலும், ஆக்கிரமிப்புகளாக உள்ள கட்டிடங்கள் மீது மஞ்சள் குறியீட்டில் அடையாளம் செய் தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் நகராட்சி பொறியாளர் சுப்புராஜ் கூறும்போது, ‘ஒரு வாரத்துக்குள் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு, ரூ. 5 லட்சம் செலவில் 240 மீட்டர் நீளத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கும்’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE