பட்டாசு தொழிற்சாலைகளுக்கான கட்டணங்களை மத்திய அரசு பலமடங்கு உயர்த்தி இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளரும் விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பட்டாசுத் தொழிலில் உள்ளனர். புதிய வரிகள், அதிகாரிகளின் தொல்லை, சீனாவிலிருந்து பட்டாசுகள் இறக்குமதி ஆகியவை அவர்களை ஏற்கெனவே பாதித்துள்ளன.
இந்த நிலையில் பட்டாசுகளை இருப்பு வைக்கும் கிடங்குக்கான கட்டணம், இரண்டு லட்சம் கிலோ எடை கொண்ட பட்டாசுகளுக்கு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.4 லட்சமாக - 27 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.300 ஆக இருந்த பரிசோதனைக் கட்டணம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. எந்த சங்கங்களையும் கலந்து பேசாமல் இந்த அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த போக்கை மதிமுக வன்மையாக கண்டிக்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago