வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரு மாதத்தில் 50 ஆயிரம் பேர் மனு: தேர்தல் நெருங்குவதால் அதிகம் பேர் ஆர்வம்

By எஸ்.சசிதரன்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரு மாதத்தில் 50 ஆயிரம் பேர் மனு செய்துள்ளனர். புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு மாத காலத்தில் இவ்வளவு பேர் மனு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பல மாதங்களாக நடைபெற்று வந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணியின் முடிவில் வாக்காளர் பட்டியலில் 23.49 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். அதன் முடிவில், தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.37 கோடியாக அதிகரித்துள்ளது.

எனினும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக தேர்தல் துறை அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஏராளமானோர் மனு செய்து வருகின்றனர். ஆன் லைனிலும், மண்டல அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு வாங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 ஆயிரம் மனுக்கள் வந்திருப்பது தெரியவந்துள்ளது. தேர்தலுக்கு முன்பு இவை பரிசீலித்து பெயர் சேர்க்கப்படும்.

இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தினர், “தி இந்து”விடம் புதன்கிழமை கூறியதாவது:

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்காக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 ஆயிரம் பேர் மனு செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அந்த ஆர்வம் காரணமாக ஏராளமானோர் மனு செய்து வருகிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகளை பொருத்தவரையில், 3.5 லட்சம் அரசு ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. ஆனால், திமுக கேட்டுக்கொண்டபடி அரசு ஊழியர் பட்டியலை தமிழகத்துக்கு மட்டும் வழங்கமுடியாது. அதைப் பற்றி மத்திய ஆணையம்தான் முடிவு செய்யவேண்டும். அரசு ஊழியர்களுக்கான தேர்தல் பணிகளுக்கான பயிற்சி விரைவில் தொடங்கவுள்ளது. வரும் 4-ம் தேதி, துணை தாசில்தார் நிலை அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்குகின்றன.

வாக்குப்பதிவு இயந்திர கோளாறு

வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தேர்தலுக்கு தயார் செய்யும் வகை யில் பெல் நிறுவன அதிகாரிகள் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயந்திரங்களில் சிறிய கோளாறுகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்