காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் தொடரும் போக்குவரத்து நெருக்கடி: எஸ்.பி. உத்தரவை அமல்படுத்துவதில் மெத்தனம்

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப் படுத்த, மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் போலீஸார் மெத்தனமாக செயல் படுவதாக புகார் எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் நகரின் முக்கிய சாலையாக கருதப்படும் ரயில்வே சாலையில் அரசு மருத்துவமனை, தலைமை தபால் நிலையம், ரயில் நிலையம், மாவட்ட விளையாட்டு மைதானம், மின்வாரிய அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்த சாலை வழியாகத்தான் நகரை விட்டு வெளியே செல்ல முடியும்.

இந்த சாலை, காந்தி சாலை யில் இணையும் பகுதியில் நகரின் பிரதான மார்க்கெட் அமைந் துள்ளது. இங்கு பல்வேறு பொருட் களை வாங்க, நகர மக்கள் மற்றும் அதை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். இதனால், இப்பகுதியில் கூட்ட நெரிசல் அதிகம் காணப்படும். சாலை கள் இணையும் பகுதியில் பயணி களை ஏற்றுவதற்காக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப் படுகிறது.

குறுகிய சாலையில் பேருந்துகள் நிறுத்தப்படுவதால், பின்னால் வரும் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப் பட்டுள்ளதால் இருசக்கர வாகனங் களும் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப் பாளரின் உத்தரவின் பேரில் காந்தி சாலையில் புதிய பேருந்து நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது. எனினும், அப்பகுதியில் உள்ள தனியார் கடைகள் மறைக்கப் படுவதால், போலீஸார் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன் பாட்டுக்கு கொண்டுவராமல் உள்ள தாக பொதுமக்கள் புகார் தெரி வித்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ் மக்கள் பண்பாட்டு கழக அமைப்பாளர் கோ.ர.ரவி கூறியதாவது:

தனியார் கடைகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் போக்குவரத்து போலீ ஸார் காந்தி சாலை பேருந்து நிறுத் தத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் அலட்சியமாக உள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவமனைக்கு செல்ல பல மணி நேரம் சாலையில் காத் திருக்கும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்றார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் டி.எஸ்.பி. பாலச்சந்தர் கூறியதாவது: போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது ரயில்வே சாலை மார்க்கெட் பகுதி யில் பேருந்துகள் நிறுத்தப்படுவ தில்லை. போலீஸார் பணியில் இல்லை என்றால், ஓட்டுநர்கள் அங்கு பேருந்துகளை நிறுத்து கின்றனர்.

காஞ்சிபுரம் அரசு போக்கு வரத்து பணிமனை அதிகாரிகளிடம் தெரிவித்து, பேருந்துகளை காந்தி சாலையில் நிறுத்தி இயக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் அரசு போக்குவரத்து பணிமனை மேலாளரிடம் கேட்டபோது: ‘பேருந்துகள் காந்தி சாலையில் நிறுத்தப்படாதது குறித்து தற் போதுதான் என் கவனத்துக்கு வந்துள்ளது.

ஓட்டுநர்களிடம் காந்தி சாலையில் பேருந்துகளை நிறுத்த அறிவுறுத்துவோம்.மார்க் கெட் பகுதியில் பேருந்துகள் நிறுத் தப்படுகிறதா என்பதை பணிமனை சார்பில் ஆட்களை நியமித்து கண்காணிப்போம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE