அரசுப் பள்ளி காவலர்களுக்கு ஈட்டிய விடுப்பு 30 நாளாக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

அரசு பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களுக்கான ஈட்டு விடுப்பை 30 நாட்களாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி்த் துறையின் முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்ட அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது:

அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களை கோடை விடுமுறையற்ற பணியாளர்களாக கருதி அவர்களின் விடுமுறை காலத்தை ஈட்டிய விடுப்புக்கு (இ.எல்.) கணக்கிட்டு தற்போது ஓராண்டுக்கு வழங்கப்படும் 17 நாள் ஈட்டிய விடுப்பை 30 நாட்களாக உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவு மூலம் ஏறத்தாழ 25 ஆயிரம் பேர் பயன்பெறுவர் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE