அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அரசுக்கு கோரிக்கை

அரசு மருத்துவமனைகளில் மருந் தாளுநர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என இந்திய மருந்தாளுநர்கள் சங்கத்தின் தலைவர் பி.முத்துசாமி தெரிவித் தார்.

இந்திய மருந்தாளுநர்கள் சங்கத்தின் சார்பில் 53-வது தேசிய மருந்தாளுநர் வாரவிழா கொண் டாட்டம், சென்னையில் நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் பி.முத்துசாமி விழாவுக்கு தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஜி.பழனி, பொருளாளர் பி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக மருந்து கட்டுப்பாடு இயக்கு நர் (பொறுப்பு) எஸ்.அப்துல்காதர், வேளச்சேரி ராம் மெடிக்கலை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு சிறந்த மருந்தாளுநர் விருதை வழங்கினார்.

இந்த விழா பற்றி, சங்கத்தின் தலைவர் பி.முத்துசாமி கூறியதா வது: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 3-வது வாரம் தேசிய மருந்தாளு நர் வாரவிழா கொண்டாடப்படு கிறது. மருந்தாளுநரின் முக்கியத்து வம் பற்றி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே விழா நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவ மனைகளில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதே போல நோயாளிகளின் எண்ணிக் கைக்கு ஏற்றவாறு மருந்தாளுநர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்.

சென்னை மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டும் தான் பி.பார்ம் படிப்பு உள்ளது. ஆனால் 40-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகளில் பி.பார்ம் படிப்பு இருக்கிறது. அதனால் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் பி.பார்ம் படிப்பை தமிழக அரசு தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE