5 மீனவர் தூக்கு விவகாரம்: மேல்முறையீட்டு மனு வாபஸ்

By மீரா ஸ்ரீனிவாசன்

போதை மருந்து கடத்தல் வழக்கில் தமிழக மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகியோருக்கு இலங்கை நீதிமன்றம் கடந்த அக்டோபர் 30-ம் தேதி மரண தண்டனை விதித்தது. மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுத்தன. 5 பேரின் சார்பில் கடந்த 11-ம் தேதி மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதனிடையே, மீனவர்களை விடு விப்பது தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ராஜபக்சவுடன் தொலைபேசியில் பேசினார். மீனவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றால்தான் அவர் களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய அதிபரால் நடவடிக்கை எடுக்க முடியும் என்று இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக மீனவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனு நேற்று வாபஸ் பெறப்பட்டது. இலங்கை அதிபர் ராஜபக்ச தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 5 மீனவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்