கூலிப்படையால் இறந்தவர் குடும்பங்களுக்கு இழப்பீடு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் கூலிப் படையி னரின் தாக்குதலால் உயிரிழந்த வர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவும், புகார் கொடுத்தவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு களை ரத்து செய்யவும் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சடையாண்டி, உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:

தமிழகத்தில் பாதிக்கப்பட்ட வர்கள் அளிக்கும் புகார்கள் மீது முறையாக நடவடிக்கை எடுக் காமல் போலீஸாரே எதிர்தரப்பை அழைத்துப் பேசி சமரசம் செய்து வைக்கின்றனர். பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தால், குற்றம் நடந் திருக்க முகாந்திரம் இருந்தால், போலீஸார் உடனடியாக வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிட்டு சமரசம் செய்யும் உரிமை போலீ ஸாருக்கு கிடையாது. விசார ணைக்குப் பின், புகாரில் உண்மை இல்லையென்றால் வழக்கை முடிக்கலாம்.

தமிழகத்தில் 1.1.2011 முதல் 31.1.2013 வரை சுமார் 21,644 புகார்கள் காவல்நிலையத்திலேயே பேசி முடிக்கப்பட்டுள்ளன. அதிக பட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 8,957 புகார்களும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 7,358 புகார்களும், மதுரை மாவட் டத்தில் 186 புகார்களும் காவல் நிலையத்திலேயே முடிக்கப் பட்டன. இதுதவிர, பாதிக்கப்பட்ட வர்கள் மீதே எதிர் தரப்பினரிடம் புகாரை பெற்று போலீஸார் வழக்கு பதிவு செய்யும் நிலையும் உள்ளது.

இவ்வாறு மாநிலத்தில் 1.1.2011 முதல் 31.1.2013 வரை புகார் கொடுக்க வந்தவர்கள் மீது 5,413 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எதிர் தரப்பி னர் மீது 7,856 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 711, தூத்துக்குடி மாவட்டத்தில் 642 வழக்குகள், திருப்பூரில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புகார் அளிக்கச் சென்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய டிஜிபி நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், புகார் கொடுத்தவர்கள் மீதே வழக்கு பதிவு செய்த போலீ ஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கூலிப் படை கொலைகள் அதி கரித்து வருகின்றன. மதுரை, சிவகங்கை, வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 19 பேர் கூலிப் படையால் கொல்லப் பட்டுள்ளனர். கூலிப் படையினரால் இறந்தவர்கள் குடும்பத்தின ருக்கும், பாதிக்கப்பட்டவர் களுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக நிதித்துறை செயலர், சட்டத்துறை செயலர், டிஜிபி ஆகியோருக்கு அக்.9ம் தேதி மனு அனுப்பினேன். எனது மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி ஆகி யோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கு.சாமித்துரை, ஞானகுருநாதன் வாதிட்டனர். மனுவுக்கு பதில ளிக்க தமிழக நிதித்துறை செயலர், சட்டத்துறை செயலர், டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE