மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த 5-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தார். இதில் ரயில்வே துறைக்கு ரூ. 65,837 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. பட்ஜெட் தாக்கல் செய்யும்போது ரயில்வே திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
தற்போது, ரயில்வே வாரியம் தனது இணையதளத்தில் ரயில்வேதிட்டங்களுக்கு எவ்வளவு நிதிஒதுக்கீடு என்ற விவரம் அடங்கிய `பிங்க் புத்தகத்தை’ வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் தற்போது நடைபெற்றுவரும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரம்:புதிய ரயில் பாதைகள்மதுரை – தூத்துக்குடி (வழி அருப்புக்கோட்டை) 143.5 கி.மீ. - ரூ. 30 கோடி, திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை 70 கி.மீ. - ரூ. 10 கோடி, திண்டிவனம் - நகரி 179.2 கி.மீ. - ரூ. 7.87 கோடி,4. அத்திப்பட்டு - புத்தூர் - 88.30 கி.மீ. - ரூ. 2 கோடி, ஈரோடு - பழநி91.05 கி.மீ. - ரூ. 10 லட்சம், சென்னை -கடலூர் (வழி மாமல்லபுரம்) 179.28 கி.மீ. - ரூ.10 லட்சம், ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி – 60 கி.மீ - ரூ. 10 லட்சம், மொரப்பூர் - தருமபுரி – 36 கி.மீ. - ரூ. 10 லட்சம், ராமேசுவரம் - தனுஷ்கோடி - 17.2 கி.மீ. - ரூ.1 லட்சம்.
இருவழிப் பாதைகள்கன்னியாகுமரி - திருவனந்தபுரம் 85 கி.மீ. பாதையை இருவழிப்பாதையாக மாற்ற ரூ. 900கோடிக்கான திட்டத்துக்கு, ரூ. 138கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னுரிமையாக கன்னியாகுமரி - நாகர்கோவில் இடையே பணிகள் இந்த ஆண்டுக்குள் நடைபெற்று இருவழிப்பாதையில் ரயில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி (159 கி.மீ.) பாதை பணிகளின் திட்ட மதிப்பீடுரூ. 1,182.31 கோடி. நாகர்கோவில் - மணியாச்சி (102 கி.மீ.) பாதை திட்ட மதிப்பீடு ரூ. 1,003.94 கோடி. இந்த பட்ஜெட்டில் நாகர்கோவில் - மணியாச்சி பணிக்காக ரூ. 183.50 கோடியும், மதுரை – தூத்துக்குடி திட்டத்துக்கு ரூ.169 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை - போடிநாயக்கனூர் இடையிலான (90.41 கி.மீ.) மீட்டர்கேஜ் பாதையை அகலப் பாதையாக மாற்றும் திட்டத்துக்கு நடப்பு பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு மொத்தம் ரூ.4,118 கோடியே 80 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அகலப்பாதை திட்டங்களுக்காக ரூ.245 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
``ரயில் பட்ஜெட்டில் தமிழக திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மிகவும் குறைவாகும். தமிழகபொருளாதார வளர்ச்சிக்கான புதிய ரயில் பாதை திட்டங்களைப்பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. தற்போது நடைபெற்றுவரும் திட்டப் பணிகள் முடிந்தபிறகே புதிய பாதை பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என ரயில் பயணிகள் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago