என்னை தயவுசெய்து உடனடியாக மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என பேராசிரியை நிர்மலா தேவி அவரது வழக்கறிஞர் கோபுவிடம் கெஞ்சும் ஆடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கல்லூரி மாணவிகளைத் தவறாக வழி நடத்தியதாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி கடந்த 2018 ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நிர்மலாதேவியின் நடவடிக்கைகளில் மாற்றம் காணப்படுகிறது. கடந்த திங்கள் கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்த பேராசிரியை நிர்மலாதேவி, நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு இடங்களில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார்.
அத்தோடு சம்பந்தம் இல்லாமலும் பேசத் தொடங்கினார் இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கறிஞர்கள் சிலர் பேராசிரியை நிர்மலா தேவியை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நேற்று முன் தினம் மாலை வேளையில் அருப்புக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பேராசிரியர் நிர்மலா தேவி சுற்றித் திரிந்துள்ளார். பின்னர் சுமார் 8 மணி முதல் 9.45 மணி வரை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தர்காவுக்குள் சென்ற நிர்மலாதேவி அங்கும் தியானத்தில் ஈடுபடுவதுபோல் அமர்ந்து நபிகள் எனக்கு ஆசீர்வாதம் செய்து உள்ளார் எனக் கூறியும் பாவா என்னை காப்பாற்றுங்கள் எனக் கூறியும் அழுது புலம்பியுள்ளார். தனது முடிகளை கைகளால் பிய்த்துப் போட்டு அழுது புலம்பினார்.
நிர்மலாதேவிக்கு மனநல பாதிப்பு என்று செய்திகள் வெளியாகத் தொடங்கின.
இந்நிலையில் , பேராசிரியர் நிர்மலாதேவி அவரது வழக்கறிஞர் கோபுவுடன் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவரே தனக்கு மனநல சிகிச்சை வேண்டும் எனக் கெஞ்சுவது பதிவாகியுள்ளது.
ஆடியோ விவரம்:
தொலைபேசியில் வழக்கறிஞர் கோபுவுடன் பேசிய நிர்மலாதேவி, "சார்.. வணக்கம். நான் ஏதாவது உங்ககிட்ட கோவமா பேசியிருந்தா மன்னிச்சுக்கோங்க. நான் நானாகவே இல்லை. எனக்கு உடனே மனநல சிகிச்சை தேவைப்படுது. தினம் தினம் ஒவ்வொரு கூத்தாக நடக்கிறது. தயவு செய்து என்னை மருத்துவமனைக்கு கூட்டிட்டு செல்லுங்கள். மதுரைக்கு போகலாம். இல்லை திருநெல்வேலி மருத்துவமனை என்றாலும் பரவாயில்லை. என்னை உடனே கூட்டிட்டு போங்க சார். இப்படியே கிளம்ப ரெடியாக இருக்கிறேன். நிறைய பிரச்சினைகளா இருக்கு. உங்களுக்கே தெரியும் நான் எப்பவுமே அப்படி பேசக்கூடியவள் இல்லைன்னு. பளீஸ் என்ன உடனே மனநல மருத்துவரிடம் கூப்பிட்டுச் செல்லுங்கள் சார்" எனக் கெஞ்சும் உரையாடல் இடம்பெற்றுள்ளது.
எதிர்முனையில் பேசிய வழக்கறிஞர் கோபு, திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையைப் பரிந்துரைத்து அங்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துவிட்டு பேசுவதாகக் கூறி தொடர்பை துண்டிக்கிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago