நெல்லையில் மஞ்சள் ஆலையில் தீ விபத்து: 4 தொழிலாளர்கள் படுகாயம்

By அசோக் குமார்

நெல்லை மாவட்டம் பிரானூர் பகுதியில் உள்ள மஞ்சள் ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

தென்காசி அருகே வல்லம்- இலஞ்சி சாலையில்   மஞ்சள் பொடியில் இருந்து எசன்ஸ் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. சிவகன் பட்டேல் என்பவருக்குச் சொந்தமான கம்பெனியில் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.இந்த ஆலையில் எத்தில் ஆல்ஹகால் உட்பட பல வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் ஆலையில் உள்ள கொதிகலன்கள் பற்றி எரியத் தொடங்கியன.

தகவல் அறிந்ததும் செங்கோட்டை, தென்காசி தீயணைப்பு நிலையங்களில் இருந்து  20 க்கும் மேற்பட்டோர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இரவுப் பணியில் இருந்த அமல்ராஜ், கண்ணன்,மணிகண்டன், செண்பகம் 4 பேர் மீட்கப்பட்டனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

தீ விபத்தில் ஆலையில் இருந்த கொதிகலன்கள் பற்றி எரிந்து வெடித்துச் சிதறியதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. பல மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்