மது ஒழிப்புக்காகப் போராடும் நந்தினியின் சகோதரி நிரஞ்சனா மதுரையில் கைது

By என்.சன்னாசி

மது ஒழிப்புக்காகப் போராடும் சட்ட மாணவி நந்தினியின் சகோதரி நிரஞ்சனாவும் மதுரையில் கைது செய்யப்பட்டார்.

மதுரையைச் சேர்ந்தவர் ஆனந்தன் (55). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் நந்தினி (24) மதுரை சட்டக் கல்லூரியில் பயின்றார். நிரஞ்சனாவும் அதே சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறார்.

நந்தினி படிக்கும்போதே தனது தந்தை ஆனந்தனுடன் சேர்ந்து தமிழகத்தில் மதுக் கடைகளை மூட வேண்டும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் வழங்கி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இதுதொடர்பாக இவர்கள் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நந்தினி 2 முறை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.

வழக்கும் கைதும்..

2014-ல் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் அரசு மதுக் கடைகளை மூட வலியுறுத்தி நந்தினி தனது தந்தையுடன் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தபோது, போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், போலீஸாரை தாக்கியதாக இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு கடாந்த ஜூன் 27-ல் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாட்சியமளிக்க வந்த போலீஸாரிடம் நந்தினி சில கேள்விகளை எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசக்கூடாது என எச்சரித்தார். அங்கிருந்த நந்தினியின் தந்தை ஆனந்தனும் மகள் எழுப்பிய கேள்வியில் தவறு ஏதுமில்லை எனக் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார். சிறிது நேரத்துக்குப் பின், “நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இனி பேசமாட்டோம்’’ என எழுதிக் கொடுத்தால் இருவரையும் விடுவிப்பதாக நீதிபதி கூறினார். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. இதையடுத்து தந்தை, மகள் இருவரையும் போலீஸார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், தனது சகோதரி, தந்தையை விடுதலை செய்யக்கோரி, 8-ம் தேதி முதல் மதுரை சட்டக் கல்லூரி முன் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாக நிரஞ்சனா அறிவித்திருந்தார்.

இதனால் நிரஞ்சனாவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய மதுரை போலீஸார் தல்லாகுளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்றே சென்றனர். ஆனால், அவர் வீட்டில் இல்லை. இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) காலை நிரஞ்சனாவின் வீட்டுக்குச் சென்ற போலீஸார் போராட்டத்துக்குப் புறப்பட்ட அவரை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

59 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்