அரசு மருத்துவமனையில் குழந்தைகள் தொடர் பலி விவகாரம்: மருத்துவ அலட்சியமே காரணமா?

தருமபுரி அரசு மருத்துவமனையில் சிசுக்கள் தொடர்ந்து இறக்கும் சம்பவத்தின் பின்னணியில் மருத் துவரீதியான குறைபாடுகளுக்கான இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இதுபற்றி நம்மிடம் சிலர் கூறிய தாவது: பச்சிளங்குழந்தைகள் பிரிவை ‘நிக்கு’ (என்ஐசியூ) என்று அழைப்பர். பிறந்தது முதல் 3 மாதங்களுக்கு உட்பட்ட, குறைந்த எடை, குறை பிரசவம், தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளான குழந்தை கள் இந்த வார்டில் பராமரிக்கப்படும். உயர் மருத்துவ (டிசிஹெச்) படிப்பை முடித்தவர்கள்தான் நிக்கு வார்டில் சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், இந்தச் சிறப்பு மருத்துவர் கள் பற்றாக்குறை நிலவுவதால் குழந்தைகள் இறக்கின்றன.

பழுதான குளிர் சாதனம்

நிக்கு வார்டில் கடந்த சில மாதங்க ளாக குளிர் சாதனம் பழுதாகி யுள்ளது. காற்றோட்டத்துக்காக அறை கதவு திறந்து வைக்கப் படுவதால் கொசு, ஈ போன்றவை உள்ளே சென்றுவிடுகிறது. மேலும், கழிவறையில் இருந்து கிருமித் தொற்று ஏற்படுவதாலும் சிசுக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

வாமரில் 4 குழந்தைகள்

வாமர் என்று அழைக்கப்படும் வெப்பம் தரும் கருவி ஒன்றில் ஒரு குழந்தை வீதம்தான் வைக்க வேண்டும். ஆனால், பற்றாக்குறையைக் காரணம் காட்டி ஒரே வாமர் கருவியில் 3 அல்லது 4 குழந்தைகள் வரை வைக்கின்றனர். இதில் ஒரு குழந்தைக்கு இருக்கும் தொற்று அடுத்த குழந்தைக்கும் பரவுகிறது. இதுதவிர குழந்தைகள் கை, கால்களை உதறும்போது அருகில் உள்ள குழந்தைக்கு பொருத்தியுள்ள சலைன் செலுத்தும் குழாய் பிடுங்கப்பட்டு சிசுக்களின் உடலிலில் இருந்து ரத்தம் கசியும் நிலை ஏற்படுகிறது.

ஜெனரேட்டர்

நீண்ட போராட்டத்துக்கு பிறகு பச்சிளங் குழந்தைகள் வார்டுக்கு தனி ஜெனரேட்டர் வழங்கப்பட்டது. ஆனால் மின்சாரம் நின்றால் உடனே ஜெனரேட்டர் தானாகவே இயங்கிக் கொள்ளும் வகையிலான சுவிட்ச் ஏற்பாடு இங்கு இல்லை. எனவே காவலர்கள் மூலம் ஜெனரேட்டரை இயக்கி மின் இணைப்பு கிடைத்து வென்டிலேட்டர், வாமர் போன்ற கருவிகள் இயங்க 5 முதல் 10 நிமி டங்கள் ஆகிவிடுகிறது. ஏற்கெனவே ஆபத்தான சூழலில் உள்ள சிசுக்கள் இந்த இடைவெளியில் இறப்பை தழுவுகின்றன.

சிலிண்டர் குழு

குழந்தைகள் பிரிவுக்கு ஆக்ஸி ஜன் வாயு வழங்கும் சிலிண்டர்கள் தீர்ந்துவிட்டால் அவற்றை மாற்ற வார்டின் காவலர்கள்தான் செல்லும்நிலை உள்ளது. ஓரிரு காவலர்கள் மட்டுமே இந்த வார்டுக்கு உள்ள நிலையில் அவர்கள் சிலிண்டர் மாற்ற செல்லும் இடைவெளியில் குழந்தைகளின் உறவினர்கள் வார்டுக்குள் நுழைந்துவிடுகின்றனர். இதனால் சிசுக்களுக்கு தொற்றுநோய் ஆபத்து ஏற்படுகிறது.

மருத்துவத் தரப்பில் இவ்வளவு குறைகள் நிலவும் சூழலில் சிசுக்களின் தொடர் மரணத்தில் மருத்துவ தவறு இல்லை என்று கூறுவது அபத்தம். மேற்கண்ட குறைபாடுகளை சீர்செய்தாலே குழந்தைகள் இறப்பு விகிதம் முற்றிலும் தவிர்க்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கைவிடும் வென்டிலேட்டர்கள்

கடந்த மே மாதம் 400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பச்சிளங் குழந்தைகள் பிரிவுக்கு சிகிச்சைக்கு வந்துள்ளன. அதில் 35-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளன. இதில் 95 சதவீதம் குழந்தைகள் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்ட குழந்தைகள்.

ஜூன் மாதம் சிகிச்சை பெற்ற 325-க்கும் மேற்பட்ட குழந்தைகளில் 45-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளன. அதில் 40 குழந்தைகள் வரை வென் டிலேட்டரில் வைக்கப்பட்டவை. ஜூலையில் சிகிச்சை பெற்ற 300 குழந்தைகளில் 35-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளன. அதில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டவை. எனவே வென்டிலேட்டர் சிகிச்சை தொடர்பாக சிறப்பு மருத்துவர்கள் தொடங்கி செவிலியர்கள் வரை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE